Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

கருணாநிதியை முடக்கிய எம்.ஜி.ஆர்; காமராஜர் எடுத்த ஆயுதம்! - உறையவைத்த தமிழகத் தேர்தல் களங்கள்!

வாக்காளப் பெருமக்களே..!

1967 சட்டமன்றத் தேர்தல்; தி.மு.க-வின் வரலாற்றில் மறக்க முடியாத தேர்தலாக அமைந்தது. முதல்முறையாக ஆட்சிக்கட்டிலில் தி.மு.க அமர்ந்தது இந்தத் தேர்தலில்தான். காஞ்சியில் காமராஜர் மேற்கொண்ட வியூகத்தை இந்தத் தேர்தலில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தி.மு.க. மொழிப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த தளகர்த்தரான பெ.சீனிவாசன் என்ற மாணவர், விருதுநகர் தொகுதியில் காமராசருக்கு எதிராகக் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காமராசர் தோற்றுப் போவார் என யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்கவில்லை. இன்றளவும் இந்தத் தோல்வி அரசியல் மேடைகளில் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்தளவுக்கு தமிழக வாக்காளர்கள் மத்தியில் நிலையாகப் பதிந்துவிட்ட சம்பவம் இது.

காமராஜர்

1967 தேர்தலில் கிடைத்த கசப்பான அனுபவத்தைக் காமராஜரும் மறந்துவிடவில்லை. தி.மு.க-வின் அதே ஆயுதத்தை 1971 தேர்தலில் கையில் எடுத்தார் காமராஜர். சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக குடந்தை ராமலிங்கம் என்ற இளைஞரை வேட்பாளராக நிறுத்தினார். இவர் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். ``ராமலிங்கம் ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி. அவர் எனக்கு அபேட்சகர்" எனக் கூறிக் கொண்டு நேரடியாக காமராஜர் வாக்கு சேகரித்தார். ஆனால், அந்தத் தேர்தலில் பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார் குடந்தை ராமலிங்கம்.

Also Read: பிக் பாஸில் கட்சிக்கொடி, பிரசார வாகனம் ரெடி... மக்களுடனேயே கூட்டணி - வெல்வாரா கமல்?#TNElection2021

காங்கிரஸ், தி.மு.க மோதல்களைப் போலவே, எம்.ஜி.ஆரும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். 1980 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதிக்கு எதிராக ஹெச்.வி.ஹண்டேவையும் பேராசிரியர் அன்பழகனுக்கு எதிராக வலம்புரி ஜானையும் நிறுத்தினார். இதனால் இருவரும் தங்கள் தொகுதிக்குள் அதிகப்படியான நாள்கள் பிரசாரம் செய்தே வெற்றிவாகை சூட முடிந்தது. இருவரையும் தங்கள் தொகுதிகளுக்குள் முடக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு வந்து சேர்ந்தது. இதனால் கடுப்பான தி.மு.க, அதே சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் நின்ற எம்.ஜி.ஆருக்கு எதிராக அதே தொகுதியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த பொன்.முத்துராமலிங்கத்தைக் களமிறக்கியது. முடிவில் எம்.ஜி.ஆரே வெற்றி பெற்றார்.

எம்.ஜி.ஆர்., காமராஜர்

இதனையடுத்து, தி.மு.க-வுக்கு பெரிதும் சவால் நிரம்பிய தேர்தலாக 1991 தேர்தல் களம் இருந்தது. ராஜீவ்காந்தியின் மரணம் ஏற்படுத்திய அனுதாப அலை, ஜெயலலிதாவின் சூறாவளி பிரசாரம் ஆகியவற்றின் முன்னால் தி.மு.க வேட்பாளர்கள் துவண்டு போனார்கள். அந்தத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியை எதிர்த்துக் களமிறக்கப்பட்டார் காங்கிரஸ் வேட்பாளர் க.சுப்பு. இவர் ஒருகாலத்தில் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். `கருணாநிதி உறுதியாகத் தோற்பார்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், வெறும் 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கருணாநிதி.

---> ஜெயலலிதாவை எதிர்த்த டி.ராஜேந்தர்.. டி.ஆருக்கு வழிவிட்ட தி.மு.க வேட்பாளர்.. ஏன்?

---> ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பர்கூர்..

---> வைகோ பல்டியடித்தது ஏன்?

---> விஜயகாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரிபிள் விஜயகாந்துகள்...ஏன்?

இந்த விவரங்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட வீடியோவை கிளிக் செய்யுங்கள்..!



source https://www.vikatan.com/government-and-politics/election/story-about-karunanithi-and-mgr-in-tamilnadu-election-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக