Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

முதல்வர் பழனிசாமி தாயார் மறைவு: தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்! #NowAtVikatan

முதல்வருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த வாரம் காலமானார். இந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த முதல்வரின் தாயார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார் ஸ்டாலின். துரைமுருகன், பொன்முடி ஆகியோர் ஸ்டாலினுடன் முதல்வர் வீட்டுக்கு வந்திருந்தார். ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் முதல்வர் வீட்டில் இருந்தனர்.



source https://www.vikatan.com/news/general-news/19-10-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக