Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் யார்? - தொடங்கியது செய்தியாளர்கள் சந்திப்பு! #LiveUpdates

தொடங்கியது செய்தியாளர்கள் சந்திப்பு!

அ.தி.மு.க வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவிக்க உள்ளார். 11 பேர் கொண்ட வழிக்காட்டுதல் குழு குறித்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார்.

அ.தி.மு.க அலுவலகத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் வந்து சேர்ந்து விட்ட நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் வந்து சேர்ந்து விட்டனர். இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழும் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்!

பன்னீர் செல்வம்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் வரிசையாக வந்து கொண்டு இருக்கிறார்கள். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது வீட்டில் இருந்து தலைமை அலுவலகம் புறப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவரே முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

துணை முதல்வர் பன்னீர் செல்வம் புறப்பட்ட சிறிது நேரத்தில் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் பழனிசாமியும் அ.தி.மு.க அலுவலகம் புறப்பட்டார்.

நள்ளிரவை தாண்டி நீண்ட பேச்சுவார்த்தை....!

பழனிசாமி, பன்னீர் செல்வம்

ஒரே நேரத்தில் வழிகாட்டு குழு அறிவிப்பையும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்கிற அறிவிப்பையும் வெளியிடப் பன்னீருக்கு விருப்பம் இல்லை. அதனாலே நேற்று நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தை நீண்டதற்குக் காரணம் என்கிறார்கள். முழு விவரத்தையும் கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்...!

Also Read: `மூன்று குழுக்கள் அமைப்பு... முதல்வர் அறிவிப்பு!' - நள்ளிரவில் பன்னீர் எடுத்த அஸ்திரம்!

9.30 - 10.00 மணிக்குள் அறிவிப்பு!

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று காலை 9.30 முதல் 10-மணிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை தலைமை அலுவலகத்துக்கு வந்து கூட்டாக இது தொடர்பாக பேட்டி அளிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

தனித்தனியே ஆலோசனை!

பன்னீர் செல்வம் - பழனிசாமி

அ.தி.மு.க கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? இந்த கேள்விக்கு பதில் இன்று காலை தெரிந்து விடும். கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த அரசியல் விவாதங்கள், இன்று காலை வெளியாகும் அறிவிப்புடன் முடிவுக்கு வரும். இன்று காலை அறிவிப்பு வெளியாகும் நிலையில், விடிய விடிய முதல்வரும் துணை முதல்வரும் தங்களின் ஆதரவாளர்களுடன தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இன்று காலையும் இந்த விவாதம் தொடர்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் இன்று காலை சந்தித்து பேசினர். அதே போன்று தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் உடனும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.



source https://www.vikatan.com/news/politics/admk-cm-candidate-announcement-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக