Ad

புதன், 7 அக்டோபர், 2020

ரஸல், மார்கன், ஷுப்மான்; மாற்றங்களோடு களமிறங்கும் கொல்கத்தா... சமாளிக்குமா சென்னை? #KKRvCSK #Preview

பாயின்ட்ஸ் டேபிளின் மத்தியில் தவழ்ந்துகொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இது எல்லா ஆண்டும் ஐபிஎல்-ன் தொடக்கத்தில் நாம் பார்க்கும் காட்சிதான் என்றாலும், தோனி தொடங்கி தீபக் சஹார் வரை, சீனியர் தொடங்கி ஜூனியர் வரை யாருமே ஃபார்மில் இல்லாமல் இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது.

கடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் ஒரு பழைய கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆனால், இது தொடருமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், சென்னை அணிக்குள் சரிசெய்யப்படவேண்டிய பிரச்னைகள் பல!

இம்ரான் தாஹிர்

கடந்த ஆண்டு கொல்கத்தாவின் பேட்டிங் அட்டாக்கை ஒன்றும் இல்லாமல் செய்துகாட்டியவர் இம்ரான் தாஹீர். கடந்த ஆண்டு கொல்கத்தாவுடன் மோதிய போட்டிகளில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் ரஸல் உள்பட கேகேஆரின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இம்ரான் தாஹிர். அடுத்து சென்னையில் நடந்த போட்டியிலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று போட்டி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. சென்னை, கொல்கத்தா அளவுக்கு அபிதாபி பிட்ச் இன்னும் ஸ்பின்னுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் ஸ்பின் எடுபடும். அதனால், இந்தப் போட்டியில் இம்ரான் தாஹிருக்கு தோனி வாய்ப்பளிக்கலாம்.

கடந்த இரண்டு சீசன்களிலும் சென்னைக்கு எதிராக வெறித்தன இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார் ஆண்ட்ரு ரஸல். 2018-ல் சென்னையில் நடந்த போட்டியில் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்திருந்தார். இதில் 11 சிக்ஸர்கள். கடந்த ஆண்டும் அரைசதம் அடித்தார். அதனால், அவர் இன்றும் சம்பவம் செய்யக்கூடும். அதற்கு தினேஷ் கார்த்திக் கொஞ்சம் பொறுமைகாக்க வேண்டும்.

தினேஷ் கார்த்திக்

ஃபார்மில் இல்லாமல் தடுமாறும் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து இயான் மோர்கனுக்கு முன்பாக பேட்டிங் ஆட வருகிறார். இங்கிலாந்தின் நான்காவது பேட்ஸ்மேன் இயான் மோர்கன். அவருக்கு வழிவிடுவதுதான் தினேஷ் கார்த்திக்கு நல்லது. ஷுப்மான் கில், சுனில் நரைன், நித்திஷ் ரானா, இயான் மோர்கன், ஆண்ட்ரு ரஸல் அதன்பிறகு தினேஷ் கார்த்திக் என்கிற பேட்டிங் ஆர்டரே கொல்கத்தாவுக்கு செட் ஆகும். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபினிஷராகவும் ஆடக்கூடியவர்தான் என்பதால் அவருக்கு 6-வது இடம் சரியாகவே இருக்கும்.

தீபக் சஹாருக்குப் பந்துகள் ஸ்விங் ஆக ஆரம்பித்திருக்கிறது. இன்றையப் போட்டியில் தீபக் சஹாரும், ஷர்துல் தாக்கூரும் சிறப்பாகப் பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கலாம். கடந்தபோட்டியில் வெற்றிபெற்றுவிட்டதால் இன்றைய போட்டியில் ப்ளேயிங் லெவனில் தோனி மாற்றங்கள் செய்வது சந்தேகம்தான். ஆனால், எப்போதும் சர்ப்ரைஸ் கொடுக்கும் தோனி, இன்றாவது கேதர் ஜாதவுக்கு பதில் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.

கேதர் ஜாதவுக்கு பதில் யாரைக் களமிறக்கலாம் என்ற கேள்வியை விகடன் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். 5000 பேருக்கு மேல் வாக்களித்த இந்த Poll-ல் ஜெகதீசனை இன்று எடுக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
CSK Poll
#KKRvCSK

பிக் ஹிட்டர்கள் கொல்கத்தாவின் பேட்டிங் ஆர்டரில் ஓப்பனிங்கில் இருந்து டெத் ஓவர்கள் வரை விளையாடக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதால் லுங்கி எங்கிடி அல்லது ஜோஷ் ஹேசல்வுட்டையும் தோனி முயற்சி செய்துபார்க்கலாம்.

Also Read: முரட்டு ஃபார்மில் மும்பை... பும்ராவின் வேரியஷன்களில் வீழ்ந்த ராஜஸ்தான்! #MIvRR #Bumrah

சென்னையின் பேட்டிங் ஆர்டரைப் பொருத்தவரை வாட்சனும், டுப்ளெஸ்ஸியும் கொடுக்கும் தொடக்கத்தை வைத்துத்தான் சென்னைக்கு ரன்கள் சேரும். அம்பதி ராயுடு அபுதாபியில்தான் மும்பைக்கு எதிராக 71 ரன்கள் அடித்தார். அவர் மீண்டும் அணிக்குள் வந்திருப்பதால் ராயுடு டாப் ஆர்டரில் சென்னைக்கு பேருதவியாக இருப்பார். தேவையைப் பொருத்து சாம் கரணை, ஜடேஜாவுக்கு முன்பாகவே தோனி இறக்கலாம். வழக்கம்போல டாஸ் வென்றதும், பெளலிங்கைத் தேர்ந்தெடுக்காமல் முதல் பேட்டிங்கையே தோனி தேர்ந்தெடுத்தால் சென்னை தப்பிக்கும்.

#KKRvCSK
இந்தப் போட்டி சென்னை, கொல்கத்தா என இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது. 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது கொல்கத்தா. 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 5வது இடத்தில் இருக்கிறது சென்னை. இந்த வெற்றி இரு அணிகளுக்குமே தங்கள் மேல் நம்பிக்கையை வரவழைக்கும் வெற்றியாக இருக்கும் என்பதால் இன்று போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kolkata-knight-riders-vs-chennai-super-kings-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக