Ad

வியாழன், 8 அக்டோபர், 2020

திண்டுக்கல்: அன்று 14… இன்று 10..! - தொடர்ந்து கைப்பற்றப்படும் நாட்டுத்துப்பாக்கிகள்!

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே உள்ளது சாணார்பட்டி கிராமம். இங்கு, கடந்த மாதம், பரதன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததற்காக, போலீசார் அவரைக் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை செய்த போலீஸார், சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளை மக்கள் வைத்திருப்பதை அறிந்தனர். இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா. தொடர்ந்து, வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில், கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்னைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.

Also Read: திண்டுக்கல்: ஓடை அருகே கிடந்த 14 நாட்டுத் துப்பாக்கிகள்! - அதிர்ச்சியில் காவல்துறை

இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி, திண்டுக்கல் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி வினோத் தலைமையிலான குழுவினர், சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை பகுதியில் ரோந்து சென்ற போது, கருந்தண்ணி ஓடை அருகே, 14 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீஸார், விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில், தற்போது, அதே பகுதியில் 10 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் கூறும் போது, “நத்தம் அருகே உள்ள பெரியமலையூர், கரந்தமலை, சின்னமலையூர், கொடைக்கானல் அருகே உள்ள மண்ணவனூர், பூண்டி, கூக்கால், தாண்டிக்குடி மேலும், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாச்சலூர் மற்றும் மாவட்டத்தில் பல இடங்களில், மக்கள் நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்திவருவதாக தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை செய்துவருகிறோம். விரைவில் துப்பாக்கி கலாசாரம் ஒழிக்கப்படும்” என்றனர்.

Also Read: `தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்



source https://www.vikatan.com/news/crime/while-14-rifles-were-seized-last-month-10-rifles-have-now-been-seized

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக