உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனியில் வசிக்கும் நஜ்மா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), ஃபதேபூரில் வசிக்கும் சல்மானை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தம்பதிகளுக்கு மத்தியில் சண்டை நடந்ததாக தெரிகிறது. அதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சல்மான் நஜ்மாவை அவரின் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டார். மேலும், நஜ்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார்.
கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை வருவது சாதரணம். எனவே, கோபம் குறைந்து அவரே வந்து தன்னை அழைத்து செல்வார் என எதிர்பார்த்த நஜ்மாவுக்கு, இந்த விவாகரத்து நோட்டீஸ் பெரும் ஏமாற்றமாக இருந்திருக்கிறது. அதனால், இது தொடர்பாக் மீரட்டில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில்," திருமணம் ஆன புதிதில் நான் ஒல்லியாக இருந்தேன். ஆனால், அதன்பிறகு நான் பருமனானேன். அதனால், என்னை குண்டானவள் என அவமானப்படுத்தினார்.
மேலும், என்னைப் போன்ற ஒருவருடன் தன்னால் வாழ முடியாது எனக் கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவருக்கு விவாகரத்து அளிக்க நான் விரும்பவில்லை. அவரோடு சேர்ந்து வாழவே விரும்புகிறேன்" என கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/meerut-man-throws-wife-out-of-house-files-for-divorce-as-she-gains-weight-after-marriage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக