உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்(Bahraich) பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தன்னை கடத்த முயன்ற இ-ரிக்ஷா ஓட்டுநர், அவரின் இரண்டு நண்பர்களிடமிருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் செய்து, அவர்களின் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளார்.
அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த இ-ரிக்ஷா ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அதோடு அவர்களை கைது செய்யும்படியாக தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், “பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்ல இ-ரிக்ஷாவில் ஏறிய போது தான் இந்த சம்பவம் நடந்தது. வழக்கத்துக்கு மாறாக டிகோனிபாக்கிலிருந்து மாற்று பாதையில் வண்டியைத் திரும்பினார். இதனால் சந்தேகமடைந்த நான் அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றேன். அப்போது அந்த இ-ரிக்ஷாவில் அந்த ஓட்டுநரின் நண்பர்கள் இருவரும் ஏறினர். பின்னர் என்னை மேரி மாதா கோயிலுக்கு அருகே உள்ள முட்புதர்களுக்குள் இழுத்து செல்ல முயன்றனர். நான் அவர்களுடன் போராடி என்னை விடுவித்து கொண்டேன். பின், பிரதான சாலை வரை ஓடி வந்து ஒரு ஆட்டோவில் ஏறி டிகோரா காவல்நிலையத்தை அடைந்தேன்” என்றார்.
source https://www.vikatan.com/news/india/school-girl-escaped-from-kidnap-attempt-and-entered-into-police-station
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக