உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அவரின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிஃபோரோவ், "ரஷ்ய படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கார்கிவ் பகுதியிலிருந்து கியேவ் வழியாகச் சென்றபோது ஜெலன்ஸ்கியின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
உடனே, அதிபருடன் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பின் பலத்த காயம் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், டிரைவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்த அனைத்து சூழ்நிலைகளையும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரிப்பார்கள்" என அவரது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
விபத்து நடந்த சில மணி நேரத்தில் ஜெலன்ஸ்கியின் இரவு தொலைக்காட்சி உரையில், ``கார்கிவ் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து நான் திரும்பி வந்துக்கொண்டிருந்தபோது சிறு விபத்து ஏற்பட்டது. ரஷ்ய ராணுவ வீரர்களை வெளியேற்றுவதற்கான எதிர் தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட முழு பிராந்தியமும் நமது வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. நமது வீரர்களின் உழைப்பால், உக்ரேனியர்கள் மீண்டும் நினைத்ததைச் செய்ய முடிந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/ukrainian-president-volodymyr-zelensky-involved-in-car-accident-not-seriously-injured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக