Ad

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

WTA Chennai Open 2022 Day 5 : தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையை வெளியேற்றிய 17-வயது L.Fruhvirtova!

N. Hibino-ஐ வெளியேற்றிய Katie Swan!

Katie Swan

நள்ளிரவு 12.20 மணிக்கு தொடங்கிய தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் ஜப்பானின் N.Hibibo-ஐ 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பிரிட்டனின் Katie Swan.

Magda Linette வெற்றி!

Magda Linette

கனடாவின் R.Marino-ஐ 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் போலந்தின் Magda Linette.

தொடரின் Promising Young Player விருதை வென்ற Linda Fruhvirtova! 

Linda Fruhvirtova

சென்னை ஓப்பன் 2022 தொடரின் Most Promising Young Player விருதை செக் குடியரசின் 17 வயது வீராங்கனை Linda Fruhvirtova-க்கு வழங்கினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வீ. மெய்யநாதன்.

V. Gracheva-ஐ வெளியேற்றிய L.Fruhvirtova!

L.Fruhvirtova - V. Gracheva

இரண்டாம் காலிறுதி ஆட்டத்தில் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனை V. Gracheva-ஐ 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் செக் குடியரசின் 17 வயது L.Fruhvirtova.

அரையிறுதிக்கு முன்னேறிய Nadia Podoroska!

E.Bouchard-ஐ 6-1, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஓப்பன் 2022 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் வீராங்கனையாக தகுதிப்பெற்றுளார் Nadia Podoroska.

மழை காரணமாக தடைபட்ட ஆட்டம்….

WTA Chennai Open 2022

மூன்றாவது செட்டில் 3-0 என்ற கணக்கில் N.Podoroska முன்னிலை வகிக்க மழை காரணமாக தற்காலிகமான நிறுத்தப்பட்டது ஆட்டம்.

மூன்றாவது செட்டிற்கு செல்லும் ஆட்டம்!

N.Podoroska

முதல் செட்டை 1-6 என்று இழந்த Podoroska இரண்டாவது செட்டை 6-4 என்று போராடி வென்றார்.

சென்னை ஓப்பன் 2022 தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் இன்று தொடக்கம்

E.Bouchard

முதல் போட்டியாக கனடாவின் E.Bouchard மற்றும் அர்ஜென்டினாவின் N.Podoroska ஆகியோர் சென்டர் கோர்ட்டில் மோதல்.



source https://sports.vikatan.com/tennis/wta-chennai-open-2022-day-5-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக