Ad

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

கவிழ்ந்த சுற்றுலா வாகனம்... 7 பேர் பலி; 10 பேர் காயம்! - இமாச்சலில் சோகம்!

இமாச்சலப்பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் ட்ரைண்ட் மலைப் பகுதிக்கு ஒரு குழுவினர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். கடுமையான மழை காரணமாக வாகன ஓட்டுநர் உட்பட 17 பேரும் நேற்று இரவு திரும்பியிருக்கிறார்கள். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரவு 8:30 மணியளவில் மலைக் குன்றிலிருந்து சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 17 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 10 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

குன்றிலிருந்து விழுந்த சுற்றுலா வாகனம்

இந்த சம்பவம் தொடர்பாக குலு மாவட்டத்தின் துணை ஆணையர் அசுதோஷ் கர்க், ``முதற்கட்ட அறிக்கையின்படி வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 17 பேர் பயணம் செய்தனர். காவல்துறை, ஊர்க்காவல்படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், குலு காவல் கண்காணிப்பாளர் (SP), "ஏழு பேர் இறந்துள்ளனர், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேர் குலுவில் உள்ள மண்டல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

குன்றிலிருந்து விழுந்த சுற்றுலா வாகனம்

இருளைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் எம்.எல்.ஏ சுரேந்தர் ஷோரி நன்றி தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/accident/7-tourists-dead-10-injured-as-vehicle-falls-into-gorge-in-himachals-kullu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக