Ad

திங்கள், 26 செப்டம்பர், 2022

கங்கனா ரணாவத் மதுரா தொகுதியில் போட்டியா?- ஹேமாமாலினி எம்.பி. புதிய தகவல்

நடிகை ஹேமாமாலினி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் தற்போது பாஜக எம்.பி.யாக இருக்கிறார். இத்தொகுதிக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கண் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அடிக்கடி உத்தரப்பிரதேச முதல்வரைச் சந்தித்துப் பேசி வருகிறார். நடிகை ஹேமாமாலினி மதுரா வந்திருந்தபோது நிருபர் ஒருவர் நடிகை கங்கனா ரனாவத் மதுரா தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்தி வெளியாகி இருப்பது குறித்து கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே பதிலளித்த ஹேமாமாலினி, ``என்ன செய்யவேண்டும் என்பதை கடவுள் கிருஷ்ணர் தான் முடிவு செய்வார். மதுராவிற்கு சினிமா நட்சத்திரங்களை மட்டும்தான் விரும்புகிறீர்கள். நாளை ராக்கி சாவந்த்கூட எம்.பி.யாகலாம். மதுராவில் இருந்து போட்டியிட விரும்பும் அரசியல்வாதிகளை நீங்கள் தேர்வு செய்யமாட்டீர்கள். மதுரா தொகுதியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே போட்டியிடவேண்டும் என்று அனைவர் தலையிலும் போட்டுவிட்டீர்கள்" என்று குறிப்பிட்டார் .

கங்கனா ரணாவத்

இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு தரப்பட்ட கருத்துக்களை தெரித்துள்ளனர். சினிமா நடிகையான நீங்கள், உங்கள் கணவர், உங்கள் மகன் அரசியலில் இருக்கிறீர்கள். இப்போது சினிமா நட்சத்திரங்கள் சினிமாவிற்கு வருவதில் உங்களுக்கு என்ன பிரசனை என்று ஒருவர் கேட்டுள்ளார். வேறு ஒருவர், எம்.பி.யான பிறகு என்ன சாதித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் மதுராவை முன்னேற்ற என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் கங்கனா ரணாவத், தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக வெளிப்படையாக சொல்லவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மதுரா வந்திருந்தபோது, தான் எந்த கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்றும், தேசியவாதிகளுக்காக மட்டும் தேர்தலில் பிரசாரம் செய்வேன் என்று கங்கனா ரனாவத் குறிப்பிட்டிருந்தார்.



source https://cinema.vikatan.com/bollywood/hema-malini-mp-has-clarified-the-news-that-actress-kangana-ranaut-will-contest-from-mathura-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக