வீராணம் ஏரி: 74 கணவாய்கள், 16 கிலோ மீட்டர் நீளம், 4 கிலோ மீட்டர் அகலம் கொண்ட கடல் போன்ற விசாலமான பெரிய ஏரியை தனது தந்தை வீரநாராயணன் பெயரில் ராஜாதித்த சோழன் அமைத்தார்.
மேலக்கடம்பூர் திருக்கோயில்: இது 'கரக்கோயில்' வகையைச் சார்ந்தது. நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய குதிரைகள் பூட்டப்பெற்ற நிலையில் தேர் வடிவிலான கட்டுமானம் கொண்டது.
கீழக்கடம்பூர் திருக்கோயில்: இசையொலிக்கும் சிற்பங்களைக் கொண்ட இந்த அழகிய கோயிலில் காணப்படும் மாப்பிள்ளை கோல சுந்தரேசர் வெகு அபூர்வம். இது சம்புவரையர்களின் மாளிகையாகவும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
வீரநாராயண பெருமாள் கோயில்: நாதமுனிகளின் அவதார திருக்கோயில் இது. இத்தலத்தில் வழிபட்டால் 108 திவ்ய தேசங்களுக்கும் சென்று வழிபட்ட பேறுகிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அனந்தீஸ்வரர் கோயில்: காட்டுமன்னார் கோயில் சவுந்தரநாயகி உடனுறை அனந்தீஸ்வரர் ஆலயத்தில்தான் ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.
பழையாறை: இங்குள்ள உடையாளூர் ராஜராஜச் சோழன் தங்கியிருந்த இடம் எனப்படுகிறது. இங்குள்ள கயிலாசநாதர் ஆலயம் கல்வெட்டுச் சிறப்பு உடையது. இங்கு சிவபாதசேகரன் என்பதை விளக்கும் சிறப்பு சிற்பமும் உள்ளது.
ராஜராஜன் பள்ளிப்படை: சோழன்மாளிகை கிராமத்துக்கு அருகே உடையாளூர் எனும் கிராமத்தில் நெருக்கமான வீடுகளுக்கு நடுவே ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் எனப்படுகிறது.
சோமநாதேஸ்வரர் கோயில்: பழையாறையில் உள்ள பிரமாண்ட கோயில் இது. இங்குதான் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் அவதரித்தார் எனப்படுகிறது. இங்கு அவருக்கு ஒரு சிலையும் உள்ளது.
நந்திபுர விண்ணகரம்: நாதன் கோயில் எனப்படும் இங்கு ஸ்ரீநிவாஸன் என்ற திருப்பெயரில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார், இங்கே கருவறையில் பெருமாளோடு நந்திபகவான் காட்சி தருவது சிறப்பு.
பஞ்சவன்மாதேவீச்சரம்: தனது சிற்றன்னை மறைந்தப் பிரிவைத் தாங்காத ராஜேந்திரன், அவரது நினைவாக பள்ளிப்படைக் கோயிலான பஞ்சவன்மாதேவீச்சரத்தைக் கட்டினார்.
திருப்புறம்பியம்: வயல்வெளிகளுக்கு நடுவே கேட்பாரற்றுக் கிடக்கிறது கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப்படைக் கோயில். விஜயாலயச் சோழன் இங்கு காட்டிய வீரத்தால் இன்றும் அவர் தெய்வமாக வழிபடப்படும் அதிசயத்தை காணலாம்.
தஞ்சை பெரிய கோயில்: 1000 ஆண்டு கால பிரமாண்ட அதிசயம். மாமன்னன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்பதைக் காணலாம்.
குழகர் கோயில்: பூங்குழலியின் நினைவாக இன்றும் காணும் அழகிய கோயில் இது. மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி அம்மை. இங்கு நடைபெறும் களறியாட்டம் தமிழர்களின் தலை சிறந்த அடையாளம் எனலாம்.
கோடியக்கரை கடற்கரை: கோடியக்கரை கடற்கரை மற்ற கடற்கரையை விட அழகாகத் தெரிவதற்கு மிக முக்கிய காரணம், அதன் அமைப்பு. 90 டிகிரி கோணத்தில் அழகாகக் காட்சி தரும் இந்தக் கடற்கரை.
4 முறை வெற்றிகரமாக பயணித்து இப்போது 5-ம் முறையாக நடைபெற இருக்கும் 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' என்ற சுற்றுலா வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).
முன்பதிவு விவரங்களுக்கு: 97909 90404
முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/ampstories/spiritual/temples/ponniyin-selvan-tour-2022-october-8th-to-10th-how-to-participate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக