Ad

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

தேனீ விஷத்தை முகத்தில் பூசிக் கொள்ளும் இங்கிலாந்து ராணி கமிலா... காரணம் இதுதான்!

வயோதிகம் என்பது காலத்தின் கட்டாயம். அனைவரும் ஒருநாள் வயதான நிலையை எட்டுவோம். கன்னங்கள் சுருங்கி, நரைகூடி, கிழப்பருவம் அடைவது இயற்கையாகவே நடக்கும்.

அப்படியிருந்தும், எப்போதும் தங்களை இளமையாக வைத்திருக்கப் பலரும் பலவகையான மெனக்கெடல்களை மேற்கொள்கிறார்கள். அரச குடும்பத்தில் இருப்பவர்கள், தங்களை மக்களிடையே அழகாகக் காட்டிக் கொள்ளத் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அத்தகைய புதுவிதமான முயற்சியைத்தான், இங்கிலாந்து ராணி கமிலா மேற்கொள்கிறார்.

camilla

தன்னுடைய மாமியாரான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர், அரச குடும்பத்தின் குயின் கன்சோர்ட் ஆனார், கமிலா (Queen consort camilla). இவருக்கு தற்போது 75 வயதாகிறது.

இவர் வயதாவதை எதிர்த்துப் போராடவும், தன்னுடைய இளமை தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முகத்திற்குத் தேனீக்களின் விஷத்தை உபயோகிக்கிறார். தேனீயின் விஷமா என வியக்கிறீர்களா?

தென்கொரியாவில் அதிகம் விற்பனையாகும் அழகு சாதன பொருள்களில் தேனீ விஷமும் ஒன்று. அதாவது தேனீயின் விஷ கிரீம் சுருக்கங்களைப் போக்கும் தன்மையைக் கொண்டது. அமெரிக்காவின் மிட்செல் நிறுவனம், இந்த கிரீமை தயாரித்துள்ளது, அந்த கிரீமையே இவர் பயன்படுத்துகிறார்.

Honey bee

தேனீ கொட்டும்போது வெளியிடப்படும் பொருள்தான் இந்தத் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கிரீமை சருமத்தில் பூசும்போது, தேனீ கொட்டியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அந்தச் சமயத்தில் கிரீம் பூசப்பட்ட இடத்தில், ரத்த ஓட்டம் அதிகரித்து, வயது முதிர்ச்சிக்கு எதிராகச் செயல்படும், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி விடும் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/fashion/international/camilla-used-bee-venom-for-reducing-ageing-effect

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக