அமெரிக்காவில் கோவாக்சின்; அனுமதி கோரும் பாரத் பயோடெக்..!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்திருந்த நிலையில், அமெரிக்காவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பாரத் பயோ-டெக் நிறுவனம், அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.
அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... ராயப்பேட்டையில் இன்று தொடங்குகிறது..!
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று முதல் மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து, நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடத்துகிறார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி?
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோக் பார்க் பங்களாவை ரூ.592 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறவிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், முகேஷ் அம்பானி இங்கிலாந்துக்குச் செல்லவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆதாரமற்றது என ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-06-11-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக