Ad

செவ்வாய், 11 மே, 2021

சட்டப்பேரவைக்குள் செல்போன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டி.ஆர்.பி.ராஜா

மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, சட்டப்பேரவைக்குள் செல்போனை கொண்டு சென்று பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய முதல் நாளிலேயே டி.ஆர்.பி. ராஜா விதிமுறைக்குபுறம்பாக, இப்படி நடந்து கொள்ளலாமா... ஏற்கனவே பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து, நன்கு அனுபவம் பெற்ற இவர், கண்ணியம் தவறி நடந்துகொள்ளலாமா என அதிமுக-வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா

தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 31 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டிருந்த போது, மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, தனது இருக்கையில் இருந்தவாறு, செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியாகி சர்ச்சை கிளப்பியுள்ளது. சட்டப்பேரவை நடைபெறும் இடத்தில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாலேயே, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அலமாரியில் செல்போன்களை வைத்துவிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் டி.ஆர்.பி.ராஜா மட்டும் செல்போனை கொண்டு சென்று பயன்படுத்தி இருப்பது விதிமுறைக்கு புறம்பானது என்கிறார்கள்.

டி.ஆர்.பி. ராஜா

2011-16 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் டி.ஆர்.பி ராஜா சட்டசபைக்குள் செல்போன் கொண்டு சென்று பயன்படுத்திய குற்றச்சாட்டில், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர் 10 நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கனவே தண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இப்படி நடந்துகொள்ளலாமா என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/news/trb-raja-used-cell-phone-inside-tn-assembly-creates-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக