Ad

புதன், 5 மே, 2021

சேலம்: `துணை முதல்வர் பதவி; பா.ஜ.க கோரினால் பரிசீலிப்போம்!' - ரங்கசாமி

''புதுவையில் துணை முதல்வர் பதவி என்பது இதுநாள் வரை கிடையாது. ஒருவேளை மத்திய பா.ஜ.க அரசு கோரிக்கை ஐத்தார் துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை செய்வோம். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி.

சாமி தரிசனம்

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். கான்கிரஸ் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி விரைவில் பதவி ஏற்க உள்ளார். அதனால் தன் இஷ்ட தெய்வமான சேலம் ஜங்ஷன் அருகே உள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

''வருகிற 7-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக பதயேற்பு விழா நடைபெற உள்ளது. நான் முதல்வராக பதவியேற்க உள்ளேன். பா.ஜ.க 3 அமைச்சர்கள் கேட்பதாக தெரியவில்லை. கூட்டணி கட்சியான பா.ஜ.க இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைக்க இருக்கிறோம். பாண்டிச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கும் சிறந்த முறையில் நிச்சயம் ஆதரவு தருவார்.

ரங்கசாமி

புதுவையில் துணை முதல்வர் பதவி என்பது இதுநாள் வரை கிடையாது. ஒருவேளை மத்திய பா.ஜ.க அரசு கோரினால் துணை முதல்வர் பதவி பரிசீலனை செய்வோம். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவையில் கொரோனா கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் பொறுப்பேற்றதும் மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/politics/if-the-bjp-requests-we-will-consider-the-post-of-deputy-chief-minister-rangasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக