Ad

புதன், 12 மே, 2021

87346 x 99999 = ? சில விநாடிகளில் விடை கண்டுபிடிக்கலாம் - உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு!

வரலாறு என்றால் கதை சொல்லலாம், அறிவியல் என்றால் செய்துகாட்டலாம், மொழி படங்களில் கவிதையும், கட்டுரையும் களைகட்டும். ஆனால் கணக்கு அப்படியா? வெறும் எண்கள், சூத்திரங்கள் என சற்று ட்ரை ஆன சப்ஜெக்ட்தான். அதனாலேயே கணக்கு என்றால் பத்து அடி தள்ளி நிற்கும் மாணவர்கள் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் தீர்வு உண்டு. கணக்கைக் கண்டு பயப்படாமல் விளையாட்டாக ரசித்துப் படிக்கற பயிற்சியை உங்களது குழந்தைகள் பெற வேண்டும் என பிரைன்கார்வ் நிறுவனத்துடன் இணைந்து ‘கணக்கு இனி கசக்காது’ என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது ஆனந்த விகடன்.

கணக்கு இனி கசக்காது

சிறு வயது முதலே கணக்கு எனும் பாடத்தைப் பெரும் பாரமாக, பயத்துடன்தான் பலர் அணுகியிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்குக் கணக்குப் பாடத்தை ரசிக்கும்படி சொல்லித்தர முடியும் என்கிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.

உதாரணத்திற்கு, 87346 x 99999, இதற்கு விடைகண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு சில விநாடிகளில் இவ்வளவு பெரிய கணக்கை எளிதாகப் போட முடியும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.

டாக்டர் பரமேஷ்வரி

குழந்தைகளின் மூளைத்திறன் வளர்ச்சி அதிகரிக்க பயிற்சி, வேதிக் மேத்ஸ் (Vedic Maths), அபாகஸ் என மிக வித்தியாசமான பாடத் திட்டங்களோடு, இளம் வயது மாணவர்களுக்கு மிக எளிதாக, சுவாரஸ்யமாகக் கணக்குப் பாடம் கற்றுக்கொடுக்கிறார் டாக்டர் பரமேஷ்வரி.

கணக்கில் புலியாக மாற வலுவான அடித்தளமாக விளங்கும் இந்த வகுப்புகள். 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். 22.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 29.05.2021 (சனிக்கிழமை) , நேரம் மாலை 6 மணி முதல் 7 மணிவரை. பயிற்சிக் கட்டணம் ரூ.400 மட்டுமே. முன்பதிவு முக்கியம்.

போட்டித் தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் இது போன்ற கணக்குப் பயிற்சியை உங்களது குழந்தைகளும் பெறுவதற்கு கீழ்க்கண்ட லிங்கில் பதிவு செய்து கொள்ளவும். https://bit.ly/33ymG1v



source https://www.vikatan.com/events/announcements/vedic-maths-training-for-children-an-online-event-by-ananda-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக