Ad

சனி, 22 மே, 2021

கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கும் எளிய 5 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

23. 5. 21 வைகாசி 9 ஞாயிற்றுக்கிழமை

திதி: துவாதசி

நட்சத்திரம்: அஸ்தம் காலை 8.54 வரை பிறகு சித்திரை

யோகம்: அமிர்தயோகம் காலை 8.54 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3 முதல் 4 வரை

சரபேஸ்வரர்

சந்திராஷ்டமம்: சதயம் காலை 8.54 வரை பிறகு பூரட்டாதி

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: சரபேஸ்வரர்

கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் சிக்கலா?

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவ வேண்டியது நம் கடமை. அதிலும் அவர்களுக்குப் பணத் தேவையிருக்கும்போது நம்மிடம் இருந்தால் கொடுத்து உதவுவதுதான் மாண்பு. அப்படி நாம் நல்ல எண்ணத்துடன் கொடுத்து உதவிய பணத்தை அவர்கள் சொன்ன நேரத்தில் திரும்பத் தரமாட்டார்கள். சிலருக்கு உண்மையிலேயே திருப்பித் தரும் சூழல் இல்லாமல் இருக்கும். அப்போது கேட்க மனம் வருந்தும். சிலரோ கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்தாலும் அவர்களோ திரும்பச் செலுத்த மனம் இல்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பணக் கஷ்டத்தோடு சேர்த்து நமக்கு மனக் கஷ்டத்தையும் தந்துவிடுவார்கள் அப்படிக் கொடுத்துத் திரும்ப வராத பணத்தைத் திரும்பப் பெற சில எளிய பரிகாரங்கள் உள்ளன. இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

23.5.21

மேஷம்

சுறுசுறுப்பு : நேற்றுவரையிருந்த தயங்கநிலை மாறி மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் பிறக்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும். பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - இனி எல்லாம் சுபமே!

ரிஷபம்

அனுகூலம் : தொடங்கும் செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மூலம் நற்செய்தி ஒன்று கிடைக்கும். - என்ஜாய் தி டே

மிதுனம்

கவனம் : ஆர்வமுடன் பணி செய்யும் நாள். என்றபோதும் வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் அவசியம். ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்

கடகம்

ஆதாயம் : உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவுகள் நீங்கும். - ஜாலி டே

சிம்மம்

செலவு : தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துப்போங்கள். சகோதரர்கள் தேடிவந்து உதவி கேட்பார்கள். - செலவே சமாளி

கன்னி

நன்மை : அனைத்துவிதத்திலும் நன்மைகள் நடைபெறும் நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடம் மட்டும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். - நாள் நல்ல நாள்.

துலாம்:

நிதானம் : செயல்களில் நிதானம் தேவை. செலவுகள் அதிகரிப்பது குறித்துக் கவலைப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

விருச்சிகம்

சாதகம் : சாதகமான நாள். புதிய முயற்சிகளைத் துணிந்து செய்யலாம். நீண்ட நாள் பிரச்னைக்குத் துணிந்து முடிவு கட்டுவீர்கள். பணவரவும் உண்டு. - சாதகமான ஜாதகம் இன்று!

தனுசு:

தன்னம்பிக்கை : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு வாய்க்கும் நாள். - ஆல் இஸ் வெல்!

மகரம்

தாமதம் : வரவேண்டிய பணமும் எதிர்பார்க்கும் செய்திகளும் தாமதமாகும். வேலைகளும் சின்னச் சின்னத் தடைகள் ஏற்பட்டு முடியும். செலவுகள் அதிகரிக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்

கும்பம்

பொறுமை : இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. பேச்சில் பொறுமை அவசியம். யாரோடும் விவாதம் செய்ய வேண்டாம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

மீனம்

தடை : செயல்களில் சின்னச் சின்ன தடைகள் வந்துபோகும். முன் ஜாக்கிரதையோடு செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். - தடை அதை உடை!



source https://www.vikatan.com/spiritual/astrology/astro-remedies-to-collected-the-loans-from-friends-and-relatives

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக