Ad

திங்கள், 8 மார்ச், 2021

``இதை எப்படி என் புள்ளைங்ககிட்ட சொல்லுவேன்!" - ஒரு அம்மாவின் வேதனைக் கதை #EnDiary

என் மகள், மருமகள் ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. இவங்க வீட்டுல ரெண்டு மாசம், அங்க வீட்டுல மூணு மாசம்னு நான் மாறி மாறி இருக்கேன். எங்கே இருக்கேனோ, அங்க வீட்டு வேலைகள், பேரப் புள்ளைங்கனு நான் பார்த்துக்கிறேன்.

மகள் வீட்டுலயிருக்கும்போது, சமையல், வீட்டு வேலை, புள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்ததும் கவனிச்சுக்கிறது, பக்கத்துல டியூஷன் கூட்டிட்டுப் போயிட்டு வர்றதுனு எல்லாம் பண்ணுவேன். ஆனா, எனக்கு ஏதாவது உடம்புக்கு முடியாம வந்து, நான் ஒரு நாள், ரெண்டு நாள் படுத்துட்டா, என்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகக்கூட என் மகளுக்கு நேரமிருக்காது. மனசும் இருக்காது. ஆபீஸ் விட்டு வரும்போதே, மூட்டுவலி, காய்ச்சல், தலவலினு மெடிக்கல்ஸ்ல சொல்லிக் கேட்டு, மாத்திரையை வாங்கிட்டு வந்து கொடுக்குறா. அதுகூட, எனக்கு உடம்பு சரியாகணுமே என்ற அக்கறையில இல்ல. நான் சுணக்கத்தைவிட்டு எழுந்தாதான் அவ வீட்டு வேலை சுணங்காம நடக்கும்ங்கிற சுயநலத்துல.

மகன் வீட்டுல இருக்கும்போதும் இதே கதை. அங்க மேல் வேலைக்கு ஆள் வெச்சிருக்காங்கங்கிறதால, ஒரு வேலை குறையும்தான். ஆனா, உதாசீனம் அதேதான். மகனுக்கும் மருமகளுக்கும், வீட்டு வேலைகள் நடந்துட்டே இருக்கிறவரை நம்ம இருப்பையே உணரமாட்டாங்க. நம்மகிட்ட பேசக்கூட நேரமிருக்காது. ஏதாச்சும் ஒரு வேலையை செய்யாம விட்டுட்டா, 'டைனிங் டேபிளை ஏன் க்ளீன் பண்ணலை?', 'வாங்கிட்டு வந்த மளிகையை எல்லாம் ஏன் இன்னும் டப்பாவுல ஸ்டோர் பண்ணல?', 'பையனுக்கு இன்னும் ஏன் பால் தரலை?'னு நாம செய்யாத வேலைகள் பத்தி விசாரணை பண்ணுறதுதான் அவங்க நம்மகூடப் பேசுற பேச்சாவே இருக்கு.

பெத்த புள்ளைங்களையே குறை சொல்றேன்னு நினைக்காதீங்க. இங்க பல பெத்தவங்களோட நிலைமை இதுதான்.



source https://www.vikatan.com/social-affairs/women/mother-shares-her-story-about-how-her-children-are-using-her-just-as-a-maid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக