மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்!
தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு என்பது ஒரு வாரத்துக்கும் மேலாக இழுபறி நிலையிலே நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தி.மு.க வுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், ம.தி.மு.க, சி.பி.ஐ, வி.சி.க கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் தி.மு.க ஒதுக்கியது குறிப்பிடதக்கது.
நாளை தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உடனான தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
source https://www.vikatan.com/news/general-news/tn-assembly-election-and-other-news-updates-08-03-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக