Ad

வெள்ளி, 19 மார்ச், 2021

தமிழகத்தின் அடுத்த CM யார்? - `The Imperfect Show' நடத்தும் ஒரு `Perfect' சர்வே!

இதோ தி இம்பெர்ஃபெக்ட் ஷோ- தேர்தல் கருத்துக்கணிப்புக்கான பிரத்யேக இணைய தளம்... theimperfectshow.com

வணக்கம் மக்களே..!

The Imperfect Show தற்போது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரமாக நடைபயிலக் காரணமே நீங்கள் தான். உங்களின் ஆதரவு இல்லாமல் இந்த ஷோ நாள்தோறும் நவில்தோறும் ஏறுமுகமாகி வெற்றி நடை போட்டிருக்காது.

உங்களில் பலர், 'பாஸு... இது எலெக்‌ஷன் டைம்... சீக்கிரமா நீங்களும் கருத்துக்கணிப்பு போடுங்க! வீ ஆர் வெய்ட்டிங்!' என பலமாகவே 'வேண்டும் வேண்டும் சர்வே வேண்டும்!' என குரல் எழுப்பி வந்தீர்கள். அந்த அன்பு வேண்டுகோளை ஏற்று

அதற்காகவே நாங்களும் களம் இறங்கிவிட்டோம். நீங்கள் தடையின்றி உங்கள் மனதைப் பகிர தனித் தளம் அமைத்துவிட்டோம்.

சர்வேயில் பங்குபெற க்ளிக் செய்க https://theimperfectshow.com/

டிஜிட்டல் சர்வே

சரி... ஏன் தனி இணைய தளம்?

பரபரக்கும் பிரசாரங்கள், பளபளக்கும் தேர்தல் அறிக்கைகள், மனம் கவரும் வாக்குறுதிகள் எனப் பல அரசியல் கட்சிகளும் மக்களின் வாக்குகளைப் பெற கடும் போட்டிப் போடுகிறார்கள்.

இப்போது நம் மனதில் எழும் பல கேள்விகள் 2021 சட்டமன்றத்தேர்தலில் வென்று அரியணையில் அமரப்போகும் அந்த 'பாகுபலி' யார்? தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் கூட்டணி எது? இந்த தேர்தலில் கவனம் ஈர்த்த முழக்கம் எது? - இது போன்ற கேள்விகளைத்தான் நாம் ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

சர்வேயில் பங்குபெற க்ளிக் செய்க https://theimperfectshow.com/

அதற்கான விடைகளை துல்லியமாக உங்களுடன் சேர்ந்து காணத்தான் The Imperfect Show டீமும் விரும்புகிறது. இதற்காகத்தான் இந்த ஸ்பெஷல் தளம்! உங்கள் எண்ண ஓட்டங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமே இந்த ஸ்பெஷல் சர்வே.

https://theimperfectshow.com/ என்ற இணையதளத்தில் உங்கள் அலைபேசி எண்களைப் பதிந்து இந்த வாக்கெடுப்பில் நீங்கள் பங்குகொள்ளலாம். உங்களின் அலைபேசி எண், `The Imperfect Show Digital Survey’-யின் OTP-க்காக மட்டுமே பயன்படுத்தப்படும். வேறு எந்த காரணத்திற்காகவும் உங்கள் அலைபேசி எண்கள் பயன்படுத்தப்படமாட்டாது. எனவே தயக்கமின்றி உள்ளே சென்று OTP எனப்படும் 'ஒருமுறை கடவுச்சொல்' எண்ணை உள்ளே இட்டு முத்துமுத்தான பத்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

டிஜிட்டல் சர்வே

இந்த சர்வே முடிவுகளை ஒரு ஸ்பெஷல் ஷோவாக Vikatan Web Tv youtube Channel-ல் 25-03-2021 அன்று வெளியிடுகிறோம்.

#TNElection2021 என்ற இந்தப் பிரமாண்ட ஜனநாயகத் திருவிழாவை, உங்களுடன் சேர்ந்து எதிர்கொள்ளத் தயாராகிறது நம் IPS குழு. கலந்துகொண்டு உங்கள் எண்ணங்களை பிரதிபலியுங்கள்.

அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் கோடான கோடி நன்றிகள்.

ஆரம்பிக்கலாங்களா..?!

சர்வேயில் பங்குபெற க்ளிக் செய்க https://theimperfectshow.com/



source https://www.vikatan.com/news/politics/the-imperfect-show-digital-survey-tn-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக