Ad

சனி, 27 மார்ச், 2021

மூன்று மாவட்டங்களை அதிர வைத்த வெடிச் சத்தம் - ராணுவ விமானம் காரணமா?

நாகை, காரைக்கால்,மயிலாடுதுறை ஆகிய மூன்று  மாவட்டங்களில்  இன்று காலை 8:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போன்ற பயங்கர வெடி சத்தம் கேட்க, மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

மயிலாடுதுறை

கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் சுற்றளவிற்கும்  மேலாக  இச்சத்தம் உணரப்பட்டிருக்கிறது. விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பிறகு நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். வீடுகளில் உள்ள பொருட்கள், பாத்திரங்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி காரைக்கால் வானிலை ஆய்வாளர் பிரபாகர் தெரிவிக்கும்போது, ``இது சோனிக்பூம் நிகழ்வு காரணமாகக் கூட இந்த சத்தமும், அதிர்வும் ஏற்பட்டிருக்கலாம். சோனிக்பூம் என்பது வானிலிருந்து கேட்கும் இடி போன்ற சத்தம். தரையில் இருப்பவர்களின் மேல் ஒரு விமானம் ஒலியின் வேகத்தைவிட வேகமாக பறக்கும்போது இந்தச் சத்தத்தை உணரலாம். ஒலியின் வேகத்தைவிட வேகமாக செல்வதுதான் சூப்பர் சோனிக்

சோனிக்பூம் என்பது, ஒரு பொருள் ஒலியின் வேகத்தைவிட வேகமாக காற்று வழியாக பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி" என்றார்

Also Read: தஞ்சாவூர்: ஒரே பள்ளியைச் சேர்ந்த 56 மாணவிகளுக்கு கொரோனா - கண்காணிப்பில் 24 கிராமங்கள்

ஆனால், சோனிக்பூமெல்லாம் இல்லை என்று மறுத்துள்ளார் மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா. மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தில் ஆய்வு செய்த அவர், ``இந்திய ராணுவ பயிற்சி விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும் போது இந்த சத்தம் ஏற்படும். இன்று மயிலாடுதுறை வழியே சென்ற ராணுவ பயிற்சி விமானத்திலிருந்து சத்தம் வந்திருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை "என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/heavy-sound-heard-in-3-karaikala-mayiladuthurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக