ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில படங்களின் ரிலீஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 26-ம் தேதி தியேட்டர்களில் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் மற்றும் சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிப்போகிறது.
'டாக்டர்' ரம்ஜானையொட்டி மே 13 அல்லது 14-ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது.
இதற்கிடையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வரும் மார்ச் 26-ம் தேதி உலகம் முழுக்க வெளியிட இருக்கிறது.
'டாக்டர்' படம் தள்ளிப்போவதால் ஏற்கெனவே மே மாதம் திட்டமிடப்பட்ட சில படங்களின் ரிலீஸிலும் குழப்பம் நீடிக்கிறது. மே 14-ம் தேதி சிம்புவின் 'மாநாடு' மற்றும் விக்ரமின் 'கோப்ரா' படங்களும் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தன. இப்போது 'டாக்டர்' படமும் மே மாதம் வருவதால் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் ஓரிரு வாரங்கள் முன்பின் தள்ளிப்போகலாம் எனத்தெரிகிறது. ஆனால், சிம்பு, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் போட்டிபோடும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே ஏப்ரல் 2-ம் தேதி கார்த்தியின் 'சுல்தான்', ஏப்ரல் 9-ம் தேதி தனுஷின் 'கர்ணன்' படங்கள் ரிலீஸாவதில் எந்த மாற்றமும் இல்லை.
source https://cinema.vikatan.com/tamil-cinema/jagamey-thandhiram-releases-on-march-26-in-netflix
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக