Ad

சனி, 20 மார்ச், 2021

"10 ஆண்டுகளில் இருண்ட உலகத்தையே மனிதகுலம் சந்திக்கும்!"- மலேசியாவில் போராட்டம்

மாறி வரும் பருவநிலை மாற்றத்தில், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் அடுத்த 10 ஆண்டுகளில், நாம் தற்போது எதிர்கொள்ளும் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் உள்ளிட்ட பேரழிவுகள் இன்னும் மோசமான நிலையை எட்டும் என எடுத்துரைக்கும் போராட்டம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

கோலாலம்பூரின் முக்கியமான சுற்றுலாத்தளமான ‘துகு நெகாராவில்’ இந்த அமைதிப் போராட்டம் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைச் சார்ந்த அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டது.
Malaysia Protest

"தற்போதைய இயற்கைச் சுழுலில் மாபெரும் மாற்றத்தால் விவசாயிகளும், கால்நடை விவசாயிகளும், மீனவர்களும் பெரிய இழப்பை சந்தித்து வருவதோடு உணவு பாதுகாப்பு குறித்த அச்சமும் எழுந்துள்ளது. அடுத்து வரும் 10 ஆண்டுகளில், அதாவது 2030-க்குள், இயற்கைக்கு ஆதரவான சரியான ஒரு நடவடிக்கையையை அரசுகள் எடுக்கத் தவறினால் இருண்ட உலகத்தையே மனிதக் குலம் சந்திக்கும். 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் வெப்பநிலை உயரும் அபாயத்தை மலேசியா கொண்டிருக்கிறது. இது நம் அடுத்த தலைமுறையையும் அவர்களின் எதிர்காலத்தையும் சேர்த்தே எரிக்கும். மலேசியா அதிலிருந்து பிழைக்காது!" என அந்த அமைப்புகள் எச்சரிக்கின்றன.

"இயற்கையைச் சுரண்டி பிழைக்கும் பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் நிதியுதவி அளித்து ஆதரவளிக்கின்றன. தென்கிழக்கு ஆசியாவில் நிலக்கரித் தொழிலுக்கு முதலீடு செய்வதையும் நிதியளிப்பதையும் நிறுத்துங்கள்" என அந்த அமைப்புகள் தங்களின் எதிர்ப்பினை வங்கிகளை நோக்கி வெளிபடுத்தியிருக்கின்றனர்.

மலேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்
மலேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்

மலேசியாவில் தொடர்ந்து விவசாய நிலங்களும், பூர்வக்குடி வனங்களும் சில தனியார் பெருநிறுவனகளின் ஆதிக்கத்தால் மேம்பாட்டு நிலமாகவும் செம்பனைக் காடுகளாகவும் மாறிவருகிறது. இதனால், இயற்கை சூழலிலும், சீதோஷன நிலையிலும் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது மலேசியா.



source https://www.vikatan.com/social-affairs/international/what-is-the-reason-behind-malaysia-environment-activists-protests

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக