Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

`இது தொடக்கம்தான்... முடிவு அல்ல!’ - கமலா ஹாரிஸ்; விழாக்கோலம் பூண்ட மன்னார்குடி கிராமம்

உலக நாடுகளின் ஒவ்வொரு நகர்விலும் ஏதாவது ஒரு வகையில் முக்கியப் பங்கு வகிக்கும் அமெரிக்கா அதிபர் பதவிக்கான தேர்தல்தான் தற்பொழுது டாக் ஆஃப் தி வேர்ல்ட்!

இந்நிலையில், உலகமே எதிர்பார்த்திருந்த ‘அடுத்த அமெரிக்க அதிபர் யார்?’ என்ற கேள்விக்கு நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி விடை சொன்னது. பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் சொன்னதுபோல ஜனநாயக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றனர்.

கமலா ஹாரிஸ், ஜோ பைடன்

இதன் மூலம் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வாகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், நாட்டின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் வெற்றி பெற்ற பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ந்த வெற்றி உரை நிகழ்வில் பங்கேற்று கமலா ஹாரிஸ் பேசுகையில்,

``வெற்றிக்காக உழைத்து, எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஜனநாயகத்தைக் காத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்தான். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே. முடிவு அல்ல. ஒரு பெண்ணை நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு நிலையல்ல; செயல். அதை மக்களால் மட்டுமே செயல்படுத்த முடியும். நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருந்த அளவற்ற அன்பே, இந்த வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியதன் விளைவாக ஜோ பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் உண்மை, ஒற்றுமை, நம்பிக்கைக்கு வாக்களித்துள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ்

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், ``இந்த வெற்றி தருணத்தில் நான் எனது தாயான ஷியாமளா கோபாலன் ஹாரிஸை நினைவு கூற விரும்புகிறேன். அவர் தனது 19-வது வயதில் அமெரிக்காவில் குடியேறியபோது இது போன்ற ஒரு வெற்றி தருணத்தை எட்டுவோம் என்று எண்ணியிருக்க மாட்டார். ஆனால், இதுபோன்ற நிலை அமெரிக்காவில் சாத்தியமாகும் என்று முழுவதுமாக நம்பிக்கை வைத்திருந்தார்.

அமெரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. இனவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்குமான சம உரிமை நிலைநாட்டப்படும். வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு எனது வெற்றி உதாரணமாக இருக்கும். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் யாராலும், எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளோம். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான செயல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு குடிமகனுக்குமான பிரதிநியாக செயல்பட்டு ஒபாமாவின் வழியில் அமெரிக்காவை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வேன்” என்று கமலா ஹாரிஸ் பேசினார்.

துளசேந்திரபுரம்
துளசேந்திரபுரம்
துளசேந்திரபுரம்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானதையடுத்து, அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பதாகைகள் வைத்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: `கமலா ஹாரிஸ் வெற்றிபெற சம்ஹார பூஜை, அன்னதானம்!' - திருவாரூர் கிராம மக்கள் வேண்டுதல்



source https://www.vikatan.com/government-and-politics/international/kamala-harriss-historic-victory-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக