Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

`ஆண் பக்தர்களுடன் பாலியல் உறவு?’ - வேலூர் சாமியார்மீது வெடிக்கும் சர்ச்சை

வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்தவர் `சாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார். இவரது இயற்பெயர் சாந்தகுமார். நான்கு பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த புகாரில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸார் சாந்தா சாமியாரை நேற்று கைது செய்து அரக்கோணம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.

சாந்தா சாமியார்

சாந்தா சாமியாரின் பணப் பரிவர்த்தனை தொடர்பான மொத்த கணக்கு வழக்குகளையும் பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவர்தான் கவனித்துவருவதாகச் சொல்கிறார்கள். மோசடிக்கு உடந்தையாக இருந்த அந்தக் கமலக்கார ரெட்டியையும், ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை புனிதவள்ளியையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், சாந்தா சாமியார்மீது பாலியல் சர்ச்சையும் எழுந்துள்ளது. ஆண் பக்தர்களிடம் மட்டுமே சாமியாரின் பாலியல் சீண்டல்கள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில், தன்னை பின்தொடரும் ஆண் பக்தர்களிடம், ‘மெசஞ்சர்’ செயலி மூலமாக ‘சாட்டிங்’ செய்து, அவர்களைப் பாலியலுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என்றும் சாந்தா சாமியார்மீது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

சாந்தா சாமியார்

அந்த மெசஞ்சர் சேட்டிங்கில், தன்னுடைய ஆபாசப் படத்தையும் சாந்தா சாமியார் ஆண் பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாமியாரின் இந்த அருவருப்பான செயல்பாடுகளை விரும்பாத பல ஆண் பக்தர்கள், ஃபேஸ்புக் பக்கத்திலும், மெசஞ்சர் செயலியிலும் சாந்தா சாமியாரைப் பின்தொடர்வதை முடக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாலியலுக்கு விரும்பும் ஆண்களைத் தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளதாகவும் சாமியார் குறித்து அதிர்ச்சிகர தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.



source https://www.vikatan.com/social-affairs/crime/sexually-harassed-male-devotees-complaint-raised-against-arrested-vellore-priest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக