Ad

திங்கள், 9 நவம்பர், 2020

`நோ வீடியோ கான்ஃபரன்ஸ்; சென்னை வரட்டும்!’ - நிர்வாகிகளுக்கு ரஜினி திடீர் அழைப்பு

நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பு செய்தியான சூழலில், திடீரென ரஜினி தரப்பில் அடுத்த செய்தி வெளியாகியிருக்கிறது.

ரஜினி

தனது அரசியல் பிரவேசம் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. இதற்கிடையில், ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 13,000 தபால் அட்டைகள் ரஜினி வீட்டுக்கு வந்ததாம்.

Also Read: அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை; ஊழலை ஒழிக்க சட்ட ஃபார்முலா! - ரஜினி கையில் எடுக்கும் புது அஸ்திரம்

தமிழகத்தில் பல ஊர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சமூக வலைதளங்களில் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் ஏராளமாக வந்தவண்ணம் இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த ரஜினி, அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்.

ரஜினி

வீடியோ கான்ஃபரன்ஸில் நிர்வாகிகளுடன் பேச சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் ரஜினி. நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைக்கச் சொல்லியிருக்கிறார். அவர்களிடம் மனதுவிட்டுப் பேசி தேர்தல் களநிலவரத்தை தெரிந்துக்கொள்ள ரெடியாகிவருகிறாராம்.



source https://www.vikatan.com/news/politics/rajini-invites-makkal-mandram-office-bearers-to-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக