Ad

வியாழன், 19 நவம்பர், 2020

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை: ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின் #NowAtVikatan

பரப்புரையை ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறார் ஸ்டாலின்!

ஸ்டாலின்

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கட்சிகள் கூட்டணி குறித்துப் பேசத் தொடங்கியிருக்கின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 100 நாள்கள் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். வரும் 29-ம் தேதி கனிமொழியும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில், தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிரசாரத் திட்டம் குறித்துத் தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் ஜனவரி மாதம், 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் ஸ்டாலின், பொங்கலுக்குப் பின்னர் தொடர்ந்து தனது பயணத்தைத் தொடரத் திட்டமிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/20-11-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக