Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

``ஆரோக்கியமான போட்டின்னா ஓகேதான்!'' - யுவன் பார்வையில் ரசிகர்களின் ராஜா Vs ரஹ்மான்!

"யுவன் இசையில் அப்பா பாடுன அளவுக்கு அப்பா இசையில் யுவன் பாடினது இல்ல. இதுபத்தி அவர்கிட்ட எப்பவாவது கேட்டிருக்கீங்களா?"

- வெ.நீலகண்டன்

"கேட்டதில்ல. ஏன்னா, அவர் இசைல 'சாய்ந்து சாய்ந்து' பாடும்போதே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒரு சங்கதியை என்னால பாடவே முடியல. அப்பாதான் ரெக்கார்டு பண்ணிட்டிருந்தாரு. நார்மலா அவர்கூட போன்ல பேசுறப்பவே எங்கே இருந்தாலும் எழுந்து நின்னுதான் பேசுவேன். அதனால இன்னும் கஷ்டமா இருந்தது. ஒருகட்டத்துல, 'டாடி நீங்க ரூமுக்குப் போய்ட்டு வாங்க. நான் பாடி வைக்கிறேன். எனக்கு சுத்தமா வரல'ன்னு சொன்னேன். அப்பா கிளம்பினதுக்கு அப்புறம் கெளதம்தான் வந்து பாட்டை ரெக்கார்டு பண்ணினார்."

யுவன் ஷங்கர் ராஜா

"ரஹ்மான் சார் பத்தி அப்பாவும் நீங்களும் பேசிக்குவீங்களா?"

- கிருஷ்ணா

"நிறைய பேசினதில்ல. 'ரங்கீலா' பட சமயத்துல அதுல ஒரு பாட்டை அப்பாவுக்குப் போட்டுக் காமிச்சோம். `யாயிரே'தான் அந்தப் பாட்டுன்னு நினைக்கிறேன். அதைக் கேட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டார். 'சவுண்டிங்காவும் டெக்னிக்கலாவும் நல்லா இருக்கு'ன்னு பாராட்டினார். அவ்ளோதான்."

"சமூக வலைதளங்களில் ராஜா-ரஹ்மான் ரசிகர்களுக்கு இடையே பலகாலமா 'யார் பெஸ்ட்'டுங்குற சண்டை நடந்துகிட்டே இருக்கு. இதை எப்படிப் பார்க்கிறீங்க?"

- சுகுணா திவாகர்

அது ஆரோக்கியமான போட்டியா இருக்குறவரை எந்தப் பிரச்னையும் இல்ல. எல்லா ரசிகர்களுக்கும் அவங்களுக்குப் பிடிச்சவங்க மேல ஒரு அபிமானம் இருக்கும்தானே. அதுக்காக இன்னொருத்தரைத் தாழ்த்திப் பேசுறது மட்டும் வேணாமே. வார்த்தைகளால யாரையும் காயப்படுத்திடாத ஆரோக்கியமான போட்டின்னா எனக்கும் ஓகேதான்.

> "யுவன்னாலே எல்லாருக்கும் தீம் மியூசிக்தான் ஞாபகத்துக்கு வரும். நீங்க இசையமைச்சதிலேயே உங்க மனசுக்கு நெருக்கமான தீம் மியூசிக் எது?"

> " 'அரவிந்தன்' மூலமா 16 வயசில் இசையமைப்பாளரா தமிழ் சினிமாவுக்கு வந்துட்டீங்க. முதல் படமே சீனியர் நடிகரோடு கனமான கதை. எப்படி அந்த வயசில் கதையை உள்வாங்கி இசையமைக்க முடிஞ்சது?"

> "கார்த்திக் ராஜாகூட தொடர்ச்சியா உங்களை ஒப்பிடுவதை எப்படிப் பார்க்கிறீங்க?"

> "வாலி, வைரமுத்து - இவர்கள் இரண்டு பேருடனும் முதல் தடவை கம்போஸ் செய்த அனுபவம் எப்படி இருந்தது?"

யுவன் ஷங்கர் ராஜா

> "மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பாடியிருக்கீங்க. இன்னொருத்தர் இசையில் 'இது நம்மால பாடிட முடியுமா'ன்னு உங்களை பயப்பட வெச்ச பாட்டு ஏதாவது இருக்கா?"

> "ரஹ்மான் வீட்ல உங்களுக்கு ஒரு ரசிகர் இருக்கார்னு கேள்விப்பட்டோம். அமீனுக்கும் உங்களுக்குமான நட்பு எப்படிப்பட்டது?"

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கிய யுவன் பேட்டியை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேங்க்ஸ்..!" - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா! https://bit.ly/3k1nTFj

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://cinema.vikatan.com/tamil-cinema/yuvan-shankar-raja-in-ananda-vikatan-press-meet-part-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக