Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

``இப்பவும் வீட்ல கிரிக்கெட்னா என்னன்னே தெரியாது!'' - நடராஜன் சிறப்புப் பேட்டி

இந்தியாவின் புதிய `யார்க்கர்' மன்னன்... டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்... 2020 ஐபிஎல்-லின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு... நம்மூர் நடராஜன்! சர்வதேச மற்றும் முன்னணி இந்திய பௌலர்களைவிடவும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக விளையாடிவரும் நடராஜனை பிஸி பிராக்டீஸ் செஷனுக்கு இடையில் வீடியோ காலில் பிடித்தோம்.

``கிரிக்கெட்டை எப்ப சீரியஸா, அதுவும் ஒரு கரியரா பார்க்க ஆரம்பிச்சீங்க?''

``உண்மையைச் சொல்லணும்னா நான் இதை சீரியஸாவே எடுத்துக்கல. எனக்கு கிரிக்கெட்ல இவ்ளோ வாய்ப்புகள் இருக்குன்னுகூடத் தெரியாது. ஊர்ல இருக்கற ஜெயப்பிரகாஷ் அண்ணா மற்றும் நண்பர்கள்தான் ஹெல்ப் பண்ணினாங்க. இவ்ளோ வேகமா வீசறன்னு என்னை முதன்முதலாப் பாராட்டினதே அண்ணன்தான். சென்னையில அவருதான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாரு. நான் இடதுகை மித வேகப்பந்து வீச்சாளர்ங்கறது எனக்கு இன்னும் உதவியா இருந்துச்சு, நல்லா ரீச்சாக அதுவும் ஒரு காரணம்.

நடராஜன்

இப்பவும் வீட்ல கிரிக்கெட்னா என்னன்னே தெரியாது. கொஞ்சம் பெரிய குடும்பம். நான்தான் மூத்த பையன். இவ்ளோ பெரிய குடும்பம் உன்னை நம்பி இருக்கு. நீ இன்னும் கிரிக்கெட் ஆடிட்டு இருக்கன்னு ஊர்க்காரங்க சொல்லுவாங்க. ஆனா, வீட்ல ஜெயப்பிரகாஷ் அண்ணா பொறுப்புல விட்டத்துக்கு அப்புறம் எதுவும் கண்டுக்கல. ரஞ்சி டிராபி, பர்ஸ்ட் டிவிஷன், செகண்ட் டிவிஷன்னு நான் செலக்ட் ஆனப்போ எல்லாம் அவங்களுக்கு எதுவும் புரியல. ஐபிஎல் வந்தப்பதான், இதுல இவ்ளோ விஷயம் இருக்கான்னு புரிஞ்சுகிட்டாங்க."

``கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீம்ல இருந்த வீரேந்திர ஷேவாக் தமிழ்நாட்டு நடராஜனை எப்படிக் கண்டுபிடிச்சாரு?''

"டிஎன்பிஎல் - குறிப்பா நான் போட்ட சூப்பர் ஓவர்தான் காரணம்னு நினைக்கிறேன். ஏதாவது ஒரு ஐபிஎல் டீம் நம்மளை எடுத்தா போதும்னுதான் இருந்தேன். ஆனா, ஷேவாக்கோட பஞ்சாப் டீம் அப்பவே மூணு கோடி கொடுத்து என்னை எடுத்ததும்தான் எனக்கு இன்னும் பிரஷர் அதிகமாயிடுச்சு. ஷேவாக் ரொம்ப நல்லா மோட்டிவேட் பண்ணுவார். இன்னமும் எனக்கு இருக்கற ஒரே பிரச்னை இந்திதான். எனக்குப் புரியும், ஆனா திரும்பப் பேச வராது. தமிழில்தான் பதில் சொல்லுவேன்.''

நடராஜன்

> ``நடராஜனுக்கு முதன்முதலில் கிரிக்கெட் ஆர்வம் எப்போது, எப்படி வந்தது?''

> ``ஜெயப்பிரகாஷ் என்கிற ஜெ.பி... அவரைப் பத்திச் சொல்லுங்க... உங்க ஜெர்ஸிலகூட 'நட்டு'க்கு முன்னாடி அவரோட பெயர்... உங்க கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் எப்படி உதவினார்?''

? ``டிஎன்பிஎல் உங்களோட வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உதவுச்சு?''

> ``உங்க யார்க்கர் பிராக்டீஸ் சீக்ரெட்ஸ் கொஞ்சம் சொல்லுங்க... 'நட்டு'னு சொன்னாலே 'யார்க்கர்'னு பிரபலமாகிடுச்சு. பிரெட் லீ வரைக்கும் உங்க 'யார்க்கர்' பால் பத்திப் பேசிட்டாங்க. இந்த ஐபிஎல்-ல அதிகமான யார்க்கர்ஸ் போட்டிருக்கீங்க... அந்தத் துல்லியம் எப்படி சாத்தியமாச்சு?''

> ``உங்களோட ஆதர்ஷமான பௌலர் யார்?''

> ``வளர்ந்துவரும் பௌலர்களுக்கு நீங்க இப்ப என்னவெல்லாம் செய்றீங்க?''

> ``உங்களோடது லவ் மேரேஜ்னு கேள்விப்பட்டோம். உங்க காதல் கதையைச் சொல்லுங்க...''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கிய நடராஜன் பேட்டியை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்!" https://bit.ly/2Fyvpsg

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-yorker-fame-t-natarajan-exclusive-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக