Ad

புதன், 14 அக்டோபர், 2020

கூடலூர்: பழக்கூடைக்குள் பதுக்கப்பட்ட குட்கா குவியல்! மைசூரிலிருந்து வந்த வாகனத்தை மடக்கிய போலீஸார்

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைத் தடை செய்வதே இயலாத காரியம்போல உள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.

மைசூரில் இருந்து சரக்கு வாகனங்களில் பெட்டி பெட்டியாக சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுகின்றன. பெரும்பாலான பெட்டிக்கடைகளிலும் எந்தத் தட்டுப்படும் இன்றி இவை கிடைக்கின்றன. ஒரு பாக்கெட் ஹான்ஸ் 40 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுங்கம் பகுதியில் கூடலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு கூடலூருக்குள் வந்த‌ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தின் ஓட்டுநர் நடராஜனிடம் பேசியுள்ளனர். ஓட்டுனரோ முன்னுக்குப்பின் முரணான பதிலை அளிக்கவும், சந்தேகமடைந்த காவலர்கள், வாகனத்தில் இருந்த லோடை கீழே இறக்கி சோதனை செய்தனர்.

குட்கா பொருட்கள்

பழக்கூடைகளுக்கு இடையில் அட்டை பெட்டிகளுக்குள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் குவியல் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக்‌ கண்டு அதிர்ச்சியடைந்தனர். குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து, ஓட்டுநர் நடராஜனையும் போலீஸார் கைது செய்தனர்.

Also Read: பாழடைந்த கட்டடத்தில் குட்கா குடோன்; டூ வீலரில் மது விற்பனை- குலசேகரத்தில் சிக்கிய `போலி நிருபர்'

இதுகுறித்து கூடலூர் காவல்துறையினர், ``‌மைசூரிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த கூடலூரைச் சேர்ந்த பிக்கப் வாகனம் ஒன்றை சோதனையிட்டோம்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

மறைத்துக் கொண்டு வரப்பட்ட குட்கா அட்டைப் பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பிக்கப் வாகனம் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தோம். வாகன உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/nilgiris-police-seized-banned-gutka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக