Ad

புதன், 14 அக்டோபர், 2020

கொரோனா சோதனை; சிறுமிகளுக்குப் பாலியல் சீண்டல்!- போலி சுகாதார ஆய்வாளரை வளைத்த குளச்சல் போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒருவர், அரசு சுகாதார ஆய்வாளர் என்று கூறி வீடுகளுக்கு சென்று கொரோனா சோதனை மேற்கொண்டு வந்துள்ளார். சோதனைக்காக வீடுகளுக்குச் செல்லும் இந்த டிப் டாப் நபர், தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு, இதுபோல பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அந்த நபர். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமிகளிடம் சில்மிஷம்

இதையடுத்து போலீஸ் டீம் கொல்லங்கோடு, நித்திரவிளை பகுதிகளில் ரகசியமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நித்திரவிளை பகுதியில் அந்த நபர் சுகாதார ஆய்வாளர் எனக் கூறி ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது மப்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Also Read: உ.பி அதிர்ச்சி: கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - மாணவர்கள் 8 பேர் கைது

விசாரணையில் அவரது பெயர் அபிலாஷ் பெர்லின் என்பதும், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 41 வயதான அபிலாஷ் பெர்லின் ஒரு வங்கியில் கடன் வசூலிப்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கொரோனா காலக்கட்டத்தைப் பயன்படுத்தி சுகாதார ஆய்வாளர் எனக் கூறி கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை செய்யச் செல்வதுபோல சென்று, வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

அபிலாஷ் பெர்லின்

கடந்த ஜனவரி மாதம் அபிலாஷ் பெர்லினுக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவரது நடவடிக்கை சரியில்லை எனக்கூறி திருமணமான ஓரிரு மாதங்களிலேயே அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில்தான் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அபிலாஷ் பெர்லின் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், போலீஸார் அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/colachel-police-arrests-a-man-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக