பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார், 2011-ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். நீதி கேட்டு கடுமையாகச் சட்டப் போராட்டம் நடத்திய சங்கரசுப்பு, "என் மகனை தெற்கு காலனி அருகேயுள்ள குளத்தில் பிணமாகக் கண்டெடுத்தார்கள். கழுத்தில் நான்கு வெட்டுக்காயங்கள் இருந்ததைவைத்து, 'இது கொலைதான்' என்றது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை.
கொலையின் பின்னணியில் சில போலீஸ் அதிகாரிகள்மீது சந்தேகம் இருந்தது. தற்கொலை வழக்காக போலீஸ் ஜோடனை செய்யப் பார்த்ததால், வழக்கு சி.பி.ஐ-க்குப் போனது. அவர்களும், இது தற்கொலையாக இருக்கலாம் என்று மழுப்பினார்கள்.
முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு டீம் அமைக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அவர்களும், 'நடந்தது கொலைதான். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று சொல்லிவிட்டனர்.
ஒன்பது வருடங்களாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவிடாமல் சதி செய்கிறது போலீஸ். `என் மகன், தானாகக் கழுத்தை அறுத்துக்கொண்டானா, நீதி எங்கே இருக்கிறது?' என்று கண்ணீர் வடித்தார் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருக்கே இந்த கதி என்றால், பொதுமக்களின் வழக்குகள் என்னவாகும்?
ஒரு வழக்கைப் பொறுத்தவரை எஃப்.ஐ.ஆர் பதிவது தொடங்கி அதில் சுமத்தப்படும் குற்றங்களுக்கு ஏற்ப மிகச் சரியான சட்டப் பிரிவுகளைப் பதிவுசெய்வது, தடயங்கள் சேகரிப்பது, குற்றத்தில் தொடர்புடையவர் களை விசாரிப்பது, திறம்பட குற்றப் பத்திரிகையை எழுதுவது இவற்றிலெல்லாம் போலீஸாரின் திறமையின்மையே ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியடைய முக்கியக் காரணமாகிறது.
கொலை, கொள்ளைகளில் போதிய ஆதாரம் சேகரிக்காமல் கோட்டைவிடுவது, எஃப்.ஐ.ஆரில் குழப்பம், அப்ரூவர் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் குளறுபடிகள், பிறழ் சாட்சியங்கள்... இப்படிப் பல நடவடிக்கைகளில் போலீஸார் சொதப்புகிறார்கள்.
'ஸ்காட்லாந்து போலீஸ்' என்று பெருமை பீற்றிக்கொள்ளும் நமது காக்கிச்சட்டைகளுக்கு என்னதான் ஆகிவிட்டது, சோம்பேறிகள் ஆகிவிட்டார்களா, அலட்சியம் காட்டுகிறார்களா அல்லது திட்டமிட்டே வழக்குகளைக் கோட்டைவிடுகிறார்களா போன்ற கேள்விகள் போலீஸாரை நோக்கி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை...
- இதுகுறித்த முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.... https://bit.ly/3lSOSDu > கேஸ் டிஸ்மிஸ்! - சேதாரமாகும் ஆதாரங்கள்... கோட்டைவிடும் காவல்துறை https://bit.ly/3lSOSDu
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/crime/how-tamilnadu-police-dept-failed-to-get-justice-from-the-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக