''பிரசாந்த் கிஷோர் மீது ஏதோ வருமானவரி வழக்கு பாயப்போகிறதாமே?'' என்று கழுகாரிடம் கேட்டோம்.
''பிரசாந்த் கிஷோர் 13 கோடி ரூபாய் வருமானவரி மோசடி செய்துவிட்டதாக சென்னையைச் சேர்ந்த இருவர் டெல்லிக்குப் புகாரளித்தனர். அந்தப் புகாரை விசாரிக்கச் சொல்லி, சென்னை வருமான வரித்துறைக்கு டெல்லி தலைமை ஓலை அனுப்பியிருக்கிறது.
கிஷோருக்கு மாதந்தோறும் பெரிய தொகையை ஊதியமாக அளிக்கிறது தி.மு.க தரப்பு. அந்தக் கணக்கு வழக்குகளில் கிஷோரை இறுக்கினால், பணம் கொடுத்த தி.மு.க-வுக்குச் சிக்கல் வரலாம்.
கிஷோர் மீது புகாரளித்த அந்த இருவருமே, தாங்கள் அந்தப் புகாரை அனுப்பவில்லை என்று இப்போது ஜகா வாங்குகிறார்களாம். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நாங்கள் டெண்டர் எடுத்து விடுவோம் என்று எங்கள் போட்டியாளர்கள் கருதுகிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் எங்கள் பெயரில் போலி புகார் அனுப்பியிருக்கிறார்கள்' என்று பொருமுகிறார்களாம்.
எது எப்படியோ, புகாரை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது வருமான வரித்துறை."
''ம்ம்... அ.தி.மு.க செய்திகள் ஏதேனும்..?''
''கரூர் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளராக இருக்கும் காமராஜும், கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகக் கச்சை கட்டுகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு காமராஜும், அரவக்குறிச்சி தொகுதிக்கு செந்தில்நாதனும் குறிவைத்திருக்கிறார்களாம்.
'என்னை மீறி உங்களுக்கு எப்படி சீட் கிடைக்குதுனு பார்க்கிறேன்' என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்விடுவதால், இரண்டு தரப்பும் ஏகத்துக்கும் மோதிக்கொள்கின்றன.
'தன்னை மீறி கரூரில் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நினைக்கிறார். இப்படியே சென்றால், கரூர் மாவட்ட அ.தி.மு.க-வுக்கு டெபாசிட் கிடைப்பதே திண்டாட்டம்தான்' என்று புலம்புகிறது அ.தி.மு.க வட்டாரம்."
'ரஜினிக்கு தி.மு.க நெருக்கடி கொடுப்பதாகக்கூட ஒரு பேச்சு உலாவருகிறதே?''
''உண்மைதான்..."
- கழுகார் திரட்டித் தந்த தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/345rzA6 > மிஸ்டர் கழுகு: "ஒதுங்கிருங்க..." - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க! https://bit.ly/345rzA6
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/general-news/is-income-tax-dept-going-to-file-a-case-against-prashant-kishor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக