Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சுவாசம் சீராக்கி அழகு கூட்டும் அற்புதப் பயிற்சி... ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோகா!

பழையன கழிதலும் புதியன புகுதலும் பிரபஞ்சத்தில் மாறாத, என்றும் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல். நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களும் அப்படித்தான். உடம்பில் சக்திகளை உருவாக்கும் சகலமும் ஒருகட்டத்தில் கழிவாக வெளியேறத்தான் வேண்டும் என்ற நிலைக்கு உள்ளாகின்றன. நீரும் உணவும் உடலுக்கு ஆற்றலைத் தந்து அதன் மிஞ்சிய பொருள்கள் கழிவாக வெளியேறுகின்றன. உதிரும் ரோமம், கொட்டும் பழைய தோல் செல்கள், வியர்வை, எச்சில், சிறுநீர் உள்ளிட்ட பல கழிவுகள் நாள்தோறும் நம்மைவிட்டு வெளியேறுகின்றன. அவை நல்ல முறையில் வெளியேறுகின்றனவா? வெளியேறுவதில் ஏதும் சிரமம் உள்ளதா என்பதைத்தான் நாம் கண்டுகொள்வதே இல்லை. பழையன கழியாமல் புதியன எப்படி ஆரோக்கியமாகத் தோன்றும் சொல்லுங்கள்.

மு. அரி

பல் தேய்ப்பதும், குளிப்பதும் மட்டுமே உடலுக்கான சுத்தி என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் எப்படிப் பல்லை சுத்தம் செய்வது என்பதைக்கூடப் பலரும் அறிந்திருப்பது இல்லை. நம் முன்னோர்கள் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு சுத்தி முறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள். கண்ணை, வாயை, உடலை... ஏன் ஆத்தும சுத்தி, அனுபவ சுத்தி, பிரபஞ்ச சுத்தி என ஆன்மாவுக்கான சுத்தி முறைகளையும் அளித்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் நமக்களித்திருக்கும் நல்ல உணவு முறை பழக்கங்கள், மூச்சு விடும் முறைகள், கழிவுகளை வெளியேற்றும் முறைகள் மற்றும் பல்வேறு சுத்தி முறைகளைப் பற்றி அறிந்துகொள்வது பயன்தரும்.

தேக சுத்தி யோகப் பயிற்சியின் பலன்கள்:

உடலில் சேர்ந்த கழிவுகள் நல்ல முறையில் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். தேவையற்ற பருமன் குறையும். தேகம் மெலிந்தவர்கள் உடல் சூடு குறைந்து எடை கூடுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும். முடி வளர்ச்சி வேகமாகும். சீரற்ற மாத விலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் நீங்கள் விரும்பியபடி இளமையாகும்.

முறையாகக் கழிவுகள் வெளியேறுவதால் வியாதிகள் அணுகாது. தோல் மினுமினுப்பாகி அழகு கூடும். சோம்பல் நீங்கும். சுவாசம் சீராகும். உடல் துர்நாற்றம் நீங்கும். இப்படி நீண்டுகொண்டே போகும் இந்தப் பயிற்சி முறைகளின் பலன்கள்.

புகை, மது, அதிக டீ / காபி போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவரவும் இந்த பயிற்சி உதவும்.

யோகா குரு அரி

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு:

இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சுத்தி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 11.10.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/the-benefits-of-shuddhi-yoga-practice-online-event-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக