Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

சென்னை: கடந்தகால வாழ்க்கையால் திசைமாறிய பெண் தொழிலதிபர்!- ஆபாசப் படங்களால் கணவர் அதிர்ச்சி

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தொழிலதிபர் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நானும் எனது கணவரும் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் தனியார் காப்பீட்டு சேவைகள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் ரத்தினக்குமார் என்பவர் 2015-ம் ஆண்டு முதல் சீனியர் சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ்வாக வேலைப்பார்த்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை

நானும் ரத்தினக்குமாரும் பணிநிமித்தமாக பேசிவந்தோம். எனக்கும் என் கணவருக்கும் குடும்பப் பிரச்னை ஏற்படும்போது மனவருத்தத்தில் அலுவலகத்தில் இருப்பேன். அந்த சமயத்தில் எனக்கு ஆறுதல் சொல்வது போல ரத்தினக்குமார் நடித்து, என் மீது அக்கறை கொண்டவராகவும் என் மீது அன்பு செலுத்துபவராகவும் ஏமாற்றி வந்துள்ளார். ஆரம்பத்தில் ரத்தினக்குமார் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் என்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அவரிடம் தெரிவித்தேன். அப்போது ஒருவருடன் நான் பழகிய தகவலைக் கூறினேன். நான் கூறிய விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னைக் காதலிப்பது போல வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்ய வேண்டும் என்றும் பல தடவை என்னுடைய நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்புமாறும் கட்டாயப்படுத்தினார் ரத்தினக்குமார்.

Also Read: சென்னை: ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய ரவுடி முரளி

நான் முடியாது என்று மறுக்கவே அவ்வாறு அனுப்பவில்லை என்றால், என் கணவரிடம் என்னுடைய கடந்த கால வாழ்க்கையை தெரிவித்துவிடுவேன் என்று என்னை ரத்தினக்குமார் மிரட்டிவந்தார். நானும் என் கணவருக்கு விஷயம் தெரிந்தால் குடும்ப வாழ்க்கை சீரழிந்து விடும் என்ற பயத்தால் ரத்தினக்குமார் கூறியவாறு வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்தும் புகைப்படங்களை அனுப்பினேன். அதுமட்டுமின்றி என்னோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். உடனே அவர், நான் அனுப்பிய புகைப்படங்களைஇணையதளத்தில் ஏற்றிவிடுவேன் என்று மிரட்டி பலமுறை என்னுடைய வீட்டிலும் பலஇடங்களிலும் என்னுடன் நெருக்கமாக இருந்தார்.

பாலியல் பலாத்காரம்

இந்தச் சமயத்தில் ரத்தினக்குமார், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் என்னுடைய ஆபாசமான புகைப்படங்களை அழித்து விடுவதாகவும் கூறினார். ஆனால் திடீரென்று என்னுடைய முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தப்படுத்தியதால் மேற்படி விஷயங்களை என் கணவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து என் கணவர், ரத்தினக்குமாரை அழைத்து விசாரணை செய்ததில், என்னை மிரட்டி என்னிடமிருந்து பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இமெயிலில் வைத்துள்ளார் என்பதையறிந்து நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினேன்.

என்னிடமும் என் கணவரிடமும் ரத்தினக்குமார் மன்னிப்பு கேட்டுவிட்டு என்னுடைய புகைப்படங்களை அழித்துவிடுவதாகக் கூறிவிட்டு சென்றவர், என் கணவரை தொடர்பு கொண்டு மிரட்டிவருகிறார். பலமுறை என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அதை பலருக்கு அனுப்பியும் வைத்துள்ளார். இன்னும் எத்தனை பேருக்கு என்னுடைய படங்களைப் பகிரிந்துள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், ரத்தினக்குமார் என்னை மட்டுமின்றி என் நிறுவனத்தில் பணிபுரிந்த சில பெண்களுக்கு இதேபோன்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பாலியல் தொல்லை

ரத்தினக்குமாரை அழைத்து விசாரித்தால் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்ற உண்மை தெரியவரும். எனவே ரத்தினக்குமார் மீதும் அவரின் அடியாள்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் ஐபிசி 354, 354 பி, 354 சி, 376, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண் தொழிலதிபர், குற்றம் சுமத்திய ரத்தினக்குமாரிடம் போலீஸார் விசாரித்தால் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது



source https://www.vikatan.com/news/crime/chennai-business-woman-files-harassment-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக