Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

ஒரு யூனிட்டிற்கு ₹8000 வருமானம்... முயல் வளர்ப்பில் லாபம் ஈட்டுவது எப்படி?

முயல்களை செல்லப்பிராணிகளாக மட்டுமல்லாமல், வருமானத்துக்காகவும் வளர்க்கலாம். முயல்களை எப்படிப் பராமரிப்பது, என்னென்ன உணவுகள் கொடுப்பது, இந்தத் தொழிலை ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது பற்றிச் சொல்கிறார் முயல் வளர்ப்பு பிசினஸ் செய்து வருகிற பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலா. முயல்களுக்கு வரக்கூடிய நோய்கள், அதற்கான தீர்வுகள் குறித்து சொல்கிறார் கால்நடை மருத்துவர் தேவகி.

முயல் வளர்க்கும் பாலா

மூன்று வகைகளில் விற்கலாம் முயல்களை..!

``மாமிசத்துக்காக, செல்லப்பிராணியாக, பரிசோதனைகளுக்காக என மூன்று வகைகளில் முயல் வளர்ப்பு நமக்கு வருமானம் ஈட்டித் தரும். மாமிசத்துக்காக வளர்க்கப்படுகிற முயல்கள் இரண்டு கிலோ வரைக்கும் எடையிருக்க வேண்டுமென்பதால், உணவு முறையில் மட்டும் சில வித்தியாசங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைவிட எடைக்குறைவாக இருக்கிற முயல்களை செல்லப்பிராணிகளாகவும் பரிசோதனைகளுக்காகவும் விற்பனை செய்யலாம்.

அடர் தீவனமும் பசுந்தீவனமும்...

மாமிசத்துக்காக வளர்க்கிற முயல்களுக்கு இரண்டு நேரம் அடர் தீவனமும், ஒரு நேரம் அடர் தீவனத்துடன் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிறந்த இரண்டு மாதங்களிலேயே ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை வைக்கும்.

வேப்பங்கொட்டை பிண்ணாக்கு, புளியங்கொட்டை பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, சோயா பீன்ஸ் பிண்ணாக்கு, கோதுமைத் தவிடு ஆகியவற்றை சேர்த்துக்கொடுப்பதுதான் அடர் தீவனம். இதில் சோயா பீன்ஸ் பிண்ணாக்கு மட்டும் 60 சதவிகிதம் இருக்க வேண்டும். அப்போதுதான் முயல்கள் சீக்கிரம் எடைபோடும். வளர்ந்த முயல்களுக்கு தினமும் 120 கிராம் அடர் தீவனத்தை, காலை, மாலை சரிபாதியாகப் பிரித்துத் தர வேண்டும்.

Rabbits

இனப்பெருக்கம் செய்யவிருக்கும் முயல்களுக்கு மேலே சொன்னவற்றுடன் அரிசித் தவிடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய அரிசித் தவிடு உதவி செய்யும். ஆனால், இது முயல்களின் உடல் எடையைக் குறைக்கக்கூடியது என்பதால் மாமிசத்துக்காக வளர்க்கப்படுகிற முயல்களுக்கு கொடுக்கக் கூடாது.

கூண்டில் வைத்து வளர்க்கிற முயல்களுக்கு கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற செரிமானம் ஆவதற்கு கடினமானக் காய்கறிகளைக் கொடுக்கக் கூடாது. அதற்குப் பதில் பசுந்தீவனமாக கொய்யா இலை, முருங்கை இலை, வேப்பிலை, வாழையிலை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து ஒரே வகையான இலைகளைக் கொடுத்து வந்தால் முயல் சாப்பிடாது. வளர்ந்த முயல்களுக்கு நாளொன்றுக்கு 300 கிராம் பசுந்தீவனத்தை காலை, மாலை என சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

முயலும் முட்டைக்கோஸும்

சென்னையில் முயல் வளர்ப்பவர்கள் அதற்கு முட்டைக்கோஸ் இலைகளையும், காலிஃப்ளவர் இலைகளையும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். ஆனால், இந்த இலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாகப் படிந்திருக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லை என்றால் மஞ்சள் தூள், உப்பு சேர்த்த தண்ணீரில் மேலே சொன்ன இலைகளை ஊறவைத்து, அலசி, முயல்களுக்குக் கொடுக்கலாம்.

முட்டைக்கோஸ் இலைகளில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை சாப்பிடும் முயல்களுக்கு கழிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் முட்டைக்கோஸ் இலைகள் கொடுப்பதைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாகக் கொடுக்கலாம். ஒருவேளை கழிச்சல் ஏற்பட்டால், கை வைத்தியமாகத் தென்னை ஓலைகளின் குச்சிகளை நீக்கிவிட்டு கொடுத்தாலே போதும். இதற்கு கட்டுப்படவில்லையென்றால், உடனே மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.

முட்டைக்கோஸ் தவிர மற்ற தீவனங்கள் வைக்கும்போது, குறிப்பாக அடர் தீவனம் வைக்கும்போது முயலுக்கு தண்ணீர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். அதனால் முயல் கூண்டுக்குள் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும்.

ஒரு யூனிட்டுக்கு தேவையான கூண்டு

முயல்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

ஒரு வேலை பார்த்துக்கொண்டே கூட முயல் வளர்க்கலாம். 7 பெண் முயல்களும் 3 ஆண் முயல்களும் கொண்டது ஒரு யூனிட். 5 யூனிட் முயல்கள் (50 முயல்கள்) வளர்க்கிறீர்கள் என்றால், தலா காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் செலவழித்து முயலுக்கு தீவனம் வைப்பது, அது வசிக்கும் இடத்தை சுத்தமாக்குவது என்று கவனித்தாலே போதும். ஒருவேளை முயல் குட்டிப் போட்டிருந்தால், அதைப் பார்ப்பதற்கும் அதற்கு ஏதாவது உடல்நல பிரச்னை வந்தால் மருந்து தருவதற்கும் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாகத் தேவைப்படும்.

பெண் முயல்கள் பிறந்த 6-வது மாதத்திலிருந்தே இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குட்டிப்போடும். ஓர் ஈட்டுக்கு 7 அல்லது 8 குட்டிகள் போடும். இதில் 5 ஆரோக்கியமாக இருந்தாலும் லாபம்தான். முயல் கூண்டுக்குள் ஒரு பாக்ஸ் வைத்துவிட்டால், தாய் முயல் அதற்குள் குட்டிப் போட்டுவிடும். தாய் முயல்களே தன் குட்டிகளுக்கு சரியாக பால் கொடுத்து, நல்லபடியாகப் பராமரிக்கும் என்பதால் நாம் பெரிய அளவுக்கு மெனக்கெட வேண்டியிருக்காது. ஆனால், குட்டிகளுக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறதா என்பதை அவற்றின் வயிற்றை வைத்து கவனிக்க வேண்டும். ஒருவேளை குட்டிகளுக்கு பால் போதாமல் இருந்தால், தாய்க்கு கால்நடை மருத்துவமனையில் இருந்து மருந்து வாங்கி வந்து உணவுடன் கலந்துக் கொடுக்க வேண்டும். அல்லது அந்த நேரத்தில் குட்டிப்போட்டிருக்கிற இன்னொரு தாய் முயலின் சாணத்தை பால் போதாமல் இருக்கிற குட்டியின் மீது தடவி, அதை அந்தத் தாய் முயலிடம் விடலாம். அதுவும் தன்னுடைய குட்டி என்று நினைத்துக்கொண்டு பால் கொடுத்துவிடும்.

முயல் வளர்ப்பு

முயல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடர் தீவனத்துடன் மல்ட்டி வைட்டமின் மருந்தைக் கலந்து கொடுக்க வேண்டும். பால் சுரப்பதுக் குறைவாக இருந்தால், தாது உப்புகள் அடங்கிய மருந்தைத் தண்ணீருடன் கலந்து தர வேண்டும். முயல்கள் சிறிய பிராணி என்பதால் இந்த மருந்துகளை மருத்துவர் சொல்கிற அளவுபடிதான் கொடுக்க வேண்டும், கவனம்.

கூண்டில் வைத்து வளர்க்கிற முயல்களை காதுகளைப் பிடித்துத் தூக்கக் கூடாது. காடுகளில் இருக்கிற முயல்களின் எடை ஒரு கிலோவுக்குள்தான் இருக்கும். ஆனால், கூண்டுகளில் வளர்க்கப்பட்ட முயல்கள் 2 கிலோ வரை எடை இருக்கும் என்பதால் காதுகளைப் பிடித்துத் தூக்கினால் அதன் காதுகளில் இருக்கிற நரம்புகள் அறுந்துவிடும். அதனால் கழுத்துப் பகுதியை பிடித்து தூக்கும்போது இன்னொரு கையை முயலின் கீழ்ப்பகுதியில் வைத்து தாங்கிக்கொள்ள வேண்டும்.

முயல்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை வேப்பிலைக் கொடுத்து வந்தால், முயலில் வயிற்றில் இருக்கிற புழுக்கள் வெளியேறிவிடும். குட்டி போட்டவுடன் தாய் முயலுக்கு 5 மில்லி வேப்பெண்ணெய் கொடுத்து டி வார்மிங் செய்ய வேண்டும்.

முயல் குட்டிகளை எப்படிப் பராமரிப்பது?

தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால், முயல் குட்டிகள் இறந்துவிடும். அதனால்தான் தாய்க்கு வைட்டமின் மருந்துகள் கொடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். குட்டிப் பிறந்ததிலிருந்து 30 முதல் 45 நாள்கள் வரைக்கும் தாயிடம் பாலருந்த வேண்டும். அதன் பிறகு இரண்டு மாதங்கள் வரைக்கும் பசுந்தீவனம் தர வேண்டும். இரண்டரை மாதத்திலிருந்து அடர் தீவனம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

Rabbit

Also Read: `நாய் வளர்ப்பும் நல்ல பிசினஸ்தான்!' ஓர் அறிமுகமும், கவனிக்க வேண்டிய விஷயங்களும்

முயல் யூனிட்!

பத்துக்கு நாலடி இடம் இருந்தாலும் ஒரு யூனிட் முயல்களை வளர்க்கலாம். ஒரு யூனிட் அமைப்பதற்கு 8,000 முதல் 12,000 ரூபாய் செலவாகும். ஒரு யூனிட்டில் 7 பெண் முயல்கள் இருக்கும். ஒரு பெண் முயல் 7 அல்லது 8 குட்டிகள் ஈனும். இதில் தலா 5 குட்டிகள் ஆரோக்கியமாக இருந்தாலே, ஓர் ஈட்டுக்கு 35 முயல் குட்டிகள் தேறும். முயல்கள் குட்டிப்போட ஆரம்பித்தால், ஒரு யூனிட்டுக்கு மாதத்துக்கு 8,000 அல்லது 9,000 ரூபாய் வரை கிடைக்கும். இதையே 10 யூனிட் வைத்து முயல்களை வளர்த்தால் நாற்பதாயிரம், 50,000 ரூபாய் எனத் தாராளமாகச் சம்பாதிக்கலாம். தரத்தின் அடிப்படையில் இறைச்சிக்கும் பரிசோதனைக்கும் வாங்குபவர்களுக்கு முயல்களை 500 ரூபாய்க்கு விற்கலாம். செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புபவர்களுக்கு 300 ரூபாய்க்கு கொடுக்கலாம். வெயில் காலத்திலும் சத்தம் அதிகமான இடத்திலும் முயல்கள் இணைசேருவது குறைந்துவிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சோஷியல் மீடியாவில் முயல் வளர்ப்பது பற்றிப் போட்டால், தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்வார்கள். இப்போதைக்கு அட்வான்ஸ் புக்கிங்கில்தான் நான் முயல் விற்றுக் கொண்டிருக்கிறேன். கூடுதல் வருமானத்துக்கு முயல் வளர்ப்பவர்கள் இரண்டு, மூன்று யூனிட்டுடன் நிறுத்திக் கொள்ளலாம். முழுநேர தொழிலாக முயல் வளர்க்க விரும்புபவர்கள் 20 யூனிட், 30 யூனிட் என்று பெரிய தொழிலாகச் செய்யலாம்." என்கிறார் பாலா.

டாக்டர் தேவகி

முயல்களுக்கு வரக்கூடிய நோய்களும் தீர்வுகளும் - கால்நடை மருத்துவர் தேவகி

``தினமும் முயலின் கூண்டை தண்ணீரால் சுத்தப்படுத்தி, ஏதாவது கிருமிநாசினியைத் தெளித்து துடைத்துவிட வேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அவற்றுக்கு முடி கொட்டி சொறி நோய் வந்துவிடும். சொறி நோய் வந்துவிட்டால், எந்தவகை கிருமியால் முயல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, ஆயின்மென்ட் தருவோம்.

முயல்களுக்கும் சளி, காய்ச்சல் பிரச்னை வரும். அந்த நேரங்களில் முயல் உணவு எடுக்காது. இதற்கு சிகிச்சை இருக்கிறது.

முயல்குட்டிகளுக்கு காதுகளில் நீர் வடிய ஆரம்பிக்கும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் சீழ் பிடித்துவிடும். வலிதாங்க முடியாத முயல்குட்டி தலையைச் சுழற்றிக்கொண்டே இருக்கும். உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி சொட்டு மருந்துவிட வேண்டும்.



source https://www.vikatan.com/news/agriculture/tips-for-rabbit-farming-and-its-business

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக