Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

`சென்னையில் முதல்வர் இருக்கச் சொன்னது கொரோனா பணிக்காகவே!’ - வெல்லமண்டி நடராஜன் விளக்கம்

``திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியிருந்தார். அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கொரோனா காலத்தில் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்காக வாரத்தில் 3 நாள்கள் சென்னையிலிருந்து பணிகளைப் பார்க்க வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்தாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கமளித்திருக்கிறார்.

முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகள் நிதி உதவி அளித்த அமைச்சர்

முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகள் மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளதே என்ற பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு அவர் "என்னை 7-ம் தேதி வரை காப்பாற்றுங்கள்’’ என்று கூறிவிட்டு சென்றார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர்

இவ்விழாவில் அமைச்சர் வளர்மதி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 3 நாள்கள் சென்னையில் இருக்க வேண்டும் என முதல்வர் கூறியதாக அமைச்சர் சொன்னது அ.தி.மு.க நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கருத்து தலைமைக்குச் சென்றதால், எதாவது நெருக்கடிகள் வரலாம் என்று நினைத்த அமைச்சர், அவசர அவசரமாக அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க பேட்டிக்கொடுத்தார்.

``இந்த கொரோனா காலத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அமைச்சர்கள் சென்னையிலிருந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி இந்த மூன்று தினங்களும் அமைச்சர் பெருமக்கள் சென்னையிலிருந்து பணிகளைப் பார்க்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதாக திரித்து கூறப்பட்டுள்ளது. நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.

பேட்டியளித்த அமைச்சர்

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கும் முடிவு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்றார். முன்னர் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்க மறுத்து 2 கேள்விகளுடன் கிளம்பிய அமைச்சர், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகக் கூறி பத்திரிகையாளர்களை அவரே அழைத்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minster-vellamandi-nadarajan-speaks-about-admk-cm-candidate-issue-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக