திண்டுக்கல் - பழனி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது முருகபவனம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் 22 வயதான ரூபனுக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள். இதனை அறிந்த அவரது நண்பர்களான அருண், ராஜபாண்டி, போஸ், விஷ்வா மற்றும் பரத் ஆகிய ஐவரும், ரூபனை கேக் வெட்ட அழைத்துச் சென்றுள்ளனர்.
Also Read: திண்டுக்கல்: ஓடை அருகே கிடந்த 14 நாட்டுத் துப்பாக்கிகள்! - அதிர்ச்சியில் காவல்துறை
மீனாட்சிநாயக்கன்பட்டி கோயில் முன்பாக கேக் வெட்டிய ரூபன், கேக் வாங்கும் போது கடையில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் கத்தியை தூக்கி எரிந்துவிட்டு, பட்டாக் கத்தியில் கேக் வெட்டியுள்ளார்.
இதனை, ரூபனின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Also Read: தேனி: குமாரை `கட்’ செய்த தேனி எம்.பி! - மத்திய அமைச்சர் பதவிக்குப் பெயர் மாற்றமா?
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் இறங்கிய தாடிக்கொம்பு போலீஸார், வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் குறித்து விசாரித்தனர். இறுதியாக வீடியோவில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்.
Also Read: திண்டுக்கல்: திருடிக்கொண்டிருக்கும்போதே வந்த போலீஸார்! - சிக்கிய கடப்பாரைத் திருடன்
தொடர்ந்து, ரூபன், அவரது நண்பர்கள் ஐவர் என ஆறு பேர் மீது, தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை விசாரணை செய்ய தேடியபோது அனைவரும் தலைமறைவானது தெரியவந்தது. ஆறு பேரையும் போலீஸார் தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/dindigul-police-books-6-over-cake-cutting-in-sword
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக