Ad

சனி, 17 அக்டோபர், 2020

பி.ஏ.சி.எல் மோசடி: `ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31' - செபி

ரூ.49,100 கோடி மோசடி..!

பி.ஏ.சி.எல் நிறுவனம், 5.5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.49,100 கோடியை சட்ட விரோதமாகத் திரட்டியது. இந்தியா முழுக்க உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் பணத்தைப் போட்டிருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் இந்த நிறுவனத்தில் பணம் போட்டிருக்கிறார்கள்.

பண மோசடி

ப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் திரட்டியதாக இந்த நிறுவனத்தின்மீது புகார் வந்ததால், இந்த நிறுவனத்தின் செயல்பாடு செபி அமைப்பால் முடக்கப்பட்டது.

இந்த நிறுவனம், குறைந்த தொகைக்கு வீட்டு மனை வழங்குவதாகச் சொல்லி, நிதி திரட்டியது. பலரும் இந்தத் திட்டத்தில் மாதம்தோறும் பணத்தைக் கட்டி வந்தார்கள். நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டபின், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டியை (R.M. Lodha Committee) அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் முதலீட்டுத் தொகையைத் திரும்ப அளிக்க (ரீஃபண்ட்) பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்யும் வேலையில் செபி இறங்கியது.

இந்த விற்பனையின் மூலம் திரட்டிய தொகையிலிருந்து ரூ.2,500-க்கு குறைவாகத் தொகை வர வேண்டியவர்களுக்கு ரீஃபண்ட் கொடுக்க செபி முடிவு செய்தது. பின்னர் இது ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

மோசடி

ரூ. 7,000 வரையில்

இப்போது ரூ. 7,000 வரையில் பணம் வர வேண்டியவர்கள் விண்ணப்பிக்கலாம் என செபி அறிவித்திருக்கிறது. இதற்கான கெடுதேதி 2020 அக்டோபர் 31 ஆகும். ஏற்கெனவே விண்ணப்பித்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அதைச் சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட 4 லட்சம் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தரப்பட்டிருக்கிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.sebipaclrefund.co.in/



source https://www.vikatan.com/business/last-date-to-apply-for-refund-from-pacl-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக