விஜய் சேதுபதி நடிப்பில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான '800' படத்தின் மோஷன் போஸ்டர் அக்டோபர் 13-ம் தேதி வெளியானது. பற்றிக்கொண்டது பரபரப்பு நெருப்பு... ''ராஜபக்சேவுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் முத்தையா முரளிதரன். அதனால், முரளிதரனின் பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது'' என்று கொந்தளிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்!
இந்த விவகாரம் உட்பட, இலங்கை அரசியல் சூழல்கள் குறித்தும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் பேசினோம்.
''முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஈழ உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த விஷயத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?''
''உலகத் தமிழர்களின் மனங்களில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், உன்னதமான மனிதராகவும் நிறைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரன் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் கிரிக்கெட்டில் மட்டும் பந்து வீசவில்லை; ஈழத்தமிழர்களின் இதயம் நொறுங்கும்படியும் பல பந்துகளை வீசியிருக்கிறார்.
2009, மே 18-ம் தேதி... உலகமே விடியாமல் இருண்ட நாள். ஈழப்படுகொலைகள் உலகத்தையே உலுக்கியெடுத்தன. ஆனால், `அந்த நாள்தான் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத சந்தோஷமான நாள்' எனப் பிரகடனம் செய்தார் முரளிதரன். அப்படியொருவரின் பாத்திரமேற்று நீங்கள் நடிக்கப் போகிறீர்களா விஜய் சேதுபதி?
உறவுகளை இழந்து இன்றளவும் தேடிக்கொண்டிருக்கும் எம் தாய்மாரை, கேவலமாகச் சித்திரித்த ஒருவரின் வரலாற்றை நீங்கள் நடித்துக்கொடுப்பது அறம்தானா?
இந்தப் படத்தில் நடிப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் புகழைவிட, அதை மறுப்பதால் உங்களைத் தேடிவரும் பெருமைகள் ஏராளம். தயவுசெய்து இதை மறுபரிசீலனை செய்யுங்கள்.
அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும்கூட தமிழர்களின் உணர்வை மதித்து, இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதை விஜய் சேதுபதி கவனத்தில்கொண்டு மக்கள் சேவகராக முடிவெடுக்க வேண்டும்.''
> ''இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்களுக்குச் சமஉரிமை அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துமாறு பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தியிருக்கிறாரே...?''
> ''தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு, 'இந்தியா-இலங்கைக்கு இடையிலான பெளத்த இணைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் 15 மில்லியன் டாலர் நிதி வழங்குவோம்' என்று மகிந்த ராஜபக்சேவிடம் கூறியிருப்பதை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?''
> ''விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பயங்கரவாதி என்றும், அவர் சிறுவர் படையை வழிநடத்தினார் என்றும், 2009 யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருக்கிறாரே..?''
- இந்தக் கேள்விகளுக்கு அளித்துள்ள விரிவான பதில்களுடன் கூடிய சண் மாஸ்டரின் பேட்டியை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க https://bit.ly/3k80y4H > "ராஜபக்சே ஒன்றும் நெல்சன் மண்டேலா அல்ல!" - கொதிக்கும் சண் மாஸ்டர் https://bit.ly/3k80y4H
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/general-news/sun-master-speaks-about-vijay-sethupathi-and-muttiah-muralitharan-biopic-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக