Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

குடும்ப அட்டைக்கு தலா 2,000 ரூபாய்?! - எடப்பாடி எடுக்கும் `தீபாவளி பரிசு’ அஸ்திரம்

கொரோனா பேரிடரால் பொருளாதார சிக்கலில் தமிழகமே சிக்கித் திணறுகிறது. நவம்பர் 14-ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மக்கள் கையில் பணமில்லாமல் தீபாவளி பண்டிகை சோர்ந்து போயிருக்கிறது. தீபாவளி நேரத்தில் களைக்கட்டும் சென்னை தி.நகர் தெருக்களும் வெறிச்சோடி இருக்கின்றன. இந்நிலையில், அரிசி அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், தீபாவளி பண்டிகையை ஒட்டி தலா 2,000 ரூபாய் விதம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ரேஷன் கடை

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள் சிலர், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஐந்து விதமான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை, அரசி அட்டை ஆகிய குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலா 2,000 ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஆலோசித்து வருகிறார். ஏற்கெனவே, கொரோனா பேரிடர் நிதியுதவியாக இவர்களுக்கு, இலவச அரிசி, உணவுப் பொருள்களுடன் தலா 1,000 ரூபாய் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. 14 நலவாரியங்களில் பதிவு செய்திருந்த தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

Also Read: ``அருமை அண்ணன்’ எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர்!’ - ஓ.பி.எஸ் அறிவிப்பு #LiveUpdates

கொரோனா பேரிடரால் இன்னும் ஸ்திரமான பொருளாதார சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் 2,000 ரூபாய் நிதியுதவி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்திருக்கிறார். இதன்படி, 1.94 கோடி அரிசி குடும்ப அட்டைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசுக்கு தோராயமாக 4,030 கோடி ரூபாய் செலவு ஏற்படும்” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், எடப்பாடி கையில் எடுக்கப்போகும் இந்த 2,000 ரூபாய் அஸ்திரம் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்குமா? என்பது அறிவிப்பு வெளிவந்தால் தெரிந்துவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-edappadi-palanisamy-plans-to-give-2000-rupees-per-rice-ration-card-for-deepavali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக