Ad

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

``வீட்டில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ்காரர்களை ராகுல் யாத்திரை வெளியே வரச் செய்துள்ளது" - ப.சிதம்பரம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால் நூறு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கி விற்றிருப்பது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

P Chidambaram

தற்போது கூட ரிசர்வ் வங்கியில் 500 பில்லியன் டாலர் அளவுக்கு கையிருப்பு உள்ளது. ஆனால், கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம்.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவை கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதால் விலை உயரலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உயராவிட்டாலும் நமது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், பணவீக்க விகிதமும், ரூபாயின் மதிப்பு சரிவதும், நாட்டின் பணவீக்க விகிதத்தை அதிகப்படுத்தும்.

Congress

பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வெற்றிப் பயணம். வீடுகளில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளை வீட்டை விட்டு வெளியில் வர வைத்துள்ளது. சாதாரண மக்கள் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறும் வழியெங்கும் இரு பக்கமும் நின்று வரவேற்கிறார்கள். மலர் தூவுகிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் 130 நாள்கள் உள்ள நிலையில் இந்த யாத்திரை மேலும் மேலும் பலம் கூடுமே தவிர பலம் குறையாது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-yatra-pull-out-caders-from-their-houses-says-pchidambaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக