Ad

வியாழன், 13 அக்டோபர், 2022

செத்துக் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் | தன் படைப்புகளை எரிக்கும் ஓவியர் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

உக்ரைனில் நடந்துவரும் போரில் சீனா இராணுவ உத்திகளை கூர்ந்து கவனித்து வருவதாக தைவானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

கணிணி சந்தையின் பாதிப்பினால் ஆயிரக்கணக்கில் இன்டெல் நிறுவனம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ஆசியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் (IMF) தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

டிவிட்டர், பயனாளர்களின் கணக்கை நிரந்தரமாக மூடுவது தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.

புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான டேமியன் ஹிர்ஸ்ட் NFT -ல் அவரது படைப்புகளை விற்ற பிறகு அவற்றை எரித்து வருவது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா உக்ரைனில் தாக்குதலை நடத்திவரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி G- 7 நாடுகளிடம் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு கோரியுள்ளார்.

97 வயதான மலேஷியாவின் முன்னாள் தலைவர் மகாதிர் முகமத் , அந்நாட்டில் நடக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி-க்கு ஊழல் குற்றச்சாட்டில் மேலும் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்தின் தீவுகளில் 500 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன.

பாகிஸ்தானில் மலேரியா பரவலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து 62 லட்சம் கொசு வலைகள் வாங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

யானை

1970-களிலிருந்து உலக வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.



source https://www.vikatan.com/ampstories/news/international/vikatan-international-news-roundup-13-10-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக