விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக டூவீலர் திருட்டு நடந்துவந்தது. இது குறித்து ஜான்பீட்டர் என்பவர் வத்திராயிருப்பு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். டூவீலர் திருட்டு வழக்கை விசாரித்ததில், டி.வி.எஸ்-XL., மற்றும் பழைய டி.வி.எஸ்-50 வாகனங்கள் மட்டுமே தொடர்ச்சியாக திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் சைக்கிள், கியர் இல்லாத டூவீலர் என வாகனத் திருட்டில் ஈடுபடுவது வத்திராயிருப்பைச் சேர்ந்த குருநாதன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, குருநாதனை போலீஸார் கைதுசெய்து விசாரித்ததில், திருட்டுக்கு உறுதுணையாக அவரின் கூட்டாளிகள் வெள்ளைச்சாமி, வைரமணி ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட டூவீலர்கள் குறித்து கேட்கையில், "எனக்கு டி.வி.எஸ்-XL மட்டும்தான் சார் ஓட்டத்தெரியும். அதனாலத்தான் அதை மட்டும் திருடுனேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, குருநாதன் சொன்ன தகவலனின்படி, அவரது கூட்டாளிகள் வெள்ளைச்சாமி, வைரமணி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஐந்து டி.வி.எஸ்-XL டுவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-xl-thiefs-in-virudhunagar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக