Ad

திங்கள், 10 மே, 2021

ஜெ. குட்புக்கில் இருந்தவர்... இப்போது ஸ்டாலினின் தனிச் செயலர்... யார் இந்த அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்?

தமிழகம் எத்தனையோ அதிகாரிகளின் இடமாற்றத்தை அமைதியாகப் பார்த்திருக்கிறது. ஆனால், தி.மு.க ஆட்சியில் முதல்வரின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நியமனம் மட்டும் தமிழகம் முழுக்க பேசு பொருளாகியிருக்கிறது. காரணம், அவர்களின் கடந்தகால செயல்பாடுகள்.

முதல்வர் ஸ்டாலின்

முந்தைய அ.தி.மு.க ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் வளைந்து கொடுத்துப் போகாததால் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலருக்கு, முதல்வர் ஸ்டாலின் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே? தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு, மதுரை மாவட்டங்களில் ஆட்சியராக இருந்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழகச் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்துள்ளார். ஹால் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக நாமே டவுன்லோட் செய்து கொள்வது போன்ற புதிய உத்திகளைக் கையாண்டார்.

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்

கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார். டி.என்.பி.எஸ்.சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றினார். ஆனால், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உதயச்சந்திரனுக்கும் நடந்த யுத்தத்தால் அவர் அங்கிருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.

இரண்டாவது செயலாளரான, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமாநாத் ஐ.ஏ.எஸ், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மருந்துகள் துறையில் பணிபுரிந்துள்ளார். மூன்றாவது செயலாளரான எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தவர். தற்போது அருங்காட்சியகம் துறை ஆணையராக உள்ளார்.

சண்முகம் ஐ.ஏ.எஸ்

நான்காவதாக அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். முதல்வரின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 4 அதிகாரிகளில் அனு ஜார்ஜ் மட்டுமே பெண் அதிகாரி. யார் இந்த அனு ஜார்ஜ்?

இவர் மீடியா வெளிச்சமே படாத நபர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர் தி.மு.க ஆட்சியில் முக்கிய பதவிக்கு வந்துள்ளார் என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது? இவர், அரியலூரில் அ.தி.மு.கவினருக்கே செக் வைத்தவர். தனிச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தொழில்துறை ஆணையராக இருந்தவர்.

அரியலூரில் கடந்த 2011 முதல் 2012 வரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார் அனு ஜார்ஜ். அவர் அந்த ஒரு வருடத்தில் செய்த திட்டம், 10 ஆண்டுகள் ஆகியும் இன்று வரையிலும் அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன செய்தார்? அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பது வழக்கம். அதனைக் கண்காணிக்க அப்போதே ஒரு குழு நியமித்தார்.

அனு ஜார்ஜ் ஐஏஎஸ்

அந்தக் குழுவை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, அந்தக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த அதிரடியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் பல குழந்தைத் திருமணங்களையும், பெண் சிசுக்கொலையையும் தடுத்து நிறுத்தினார். குழந்தைத் திருமணங்களைத் தடுத்த கையோடு பெண் பிள்ளைகளை அழைத்து, அவர்களுக்காகச் சிறப்பு தங்கும் இடங்களை ஏற்படுத்தி, படிக்க ஏற்பாடுகள் செய்தார்.

இதில் சில பெண் குழந்தைகள் இப்போது பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் பட்டம்பெற்று வெற்றியாளர்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். அரியலூரில் பல வருடங்களாகக் கிடப்பில் கிடந்த செட்டிக்குளம் ஏரியை தூர்வாரி பூங்காவாக மாற்றியதோடு வாக்கிங் செல்லும் இடமாகவும் மாற்றிக்காட்டினார்.

அரியலூர் சிமென்ட் ஆலை

அரியலூர் தனியார் சிமென்ட் ஆலையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிமென்ட் மூட்டையின் விலையில் பத்து பைசாவை அரசுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார். இங்கிருந்த 9 ஆலைகளிலும் பல லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின. அவற்றிலிருந்து வருமானமும் வந்தது. அதில் கிடைக்கப்பெற்ற பணத்தைக்கொண்டு தரமான சாலைகளை அமைத்தார். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி சாலைகள் தரமாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அனு ஜார்ஜ்தான். இதற்கு முன்பு எத்தனையோ ஆட்சியர்கள் இருந்தார்கள். அவர்கள் செய்யாததை அனு ஜார்ஜ் செய்துகாட்டினார்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான துரைமணிவேல், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கினார். இந்தத் தகவல் அனு ஜார்ஜ்க்கு வந்தது. சத்தமே இல்லாமல் தகுதியான நபர்களுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீட்டைத் தட்டி பணி ஆணை வழங்கப்பட்டதுடன், அடுத்த நாளே வேலையில் சேரவேண்டும் என்கிற கறாரான உத்தரவையும் பிறப்பித்திருந்தார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகம்

Also Read: “கல்விச் சீர்திருத்தத்துக்குக் கிடைத்த பரிசா இது?”... உதயசந்திரன் விவகாரத்தில் கொந்தளிக்கும் எழுத்தாளர்கள்!

காரணம் சனி, ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் யாரும் பணி நியமனத்திற்கு ஸ்டே வாங்கிவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியர் போட்ட ப்ளான் அது என்று அதிகாரிகள் ஆட்சியரைப் புகழ்ந்து தள்ளினார்கள். மறுபுறம், இதனைக் கேள்விப்பட்டதும் கடுப்பான துரைமணிவேல், ஆட்சியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ததோடு சென்னையில் ஒரு வார காலம் தங்கியிருந்து அவரை டிரான்ஸ்ஃபர் போட்டபிறகுதான் அரியலூருக்கே வந்தார்.

பின்பு தொழில்துறை ஆணையராகப் பதவி வகித்து வந்தார். தொழில் மற்றும் வணிக இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். திட்டமிடுவதில் இவர் கில்லி என்பதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்ததோடு, அவரை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஜெயலலிதா.

முதல்வர் ஸ்டாலின்

Also Read: `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!’ - 50 ஆண்டுக்கால அரசியலின் வெற்றி

அதனைத் தொடர்ந்து அனு ஜார்ஜ் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை, அமுதா ஐ.ஏ.எஸ்-ஸுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டார். அவர்களின் செயல்பாடு அனைவரையும் ஈர்த்ததால் அனு ஜார்ஜை ஸ்டாலின் டிக் அடித்ததாக சொல்கிறார்கள் அதிகாரிகள் வட்டத்தினர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/who-is-anu-george-ias-appointed-as-tamil-nadu-chief-minister-mk-stalins-secretary-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக