Ad

திங்கள், 1 மார்ச், 2021

நொந்து நூடுல்ஸ் ஆகமுடியுமா?! - தமிழனின் தலையாயப் பிரச்னைகள்! #PhotoStory

1008 பிரச்னைகள்

1008

''எவ்ளோ பிரச்னைகளோட வாழறேன் பார்''னு தமிழன் மத்தவங்களுக்கு காட்டிக்கிறதுக்கு உதவுற அப்பாவி நம்பர். 'நானே ஆயிரத்தெட்டு பிரச்னைல இருக்கேன்'னு சொல்றவங்ககிட்ட ஒன்று இரண்டு என ஔவையார் போல பத்து பிரச்னைய வரிசைப்படுத்தி சொல்லுங்கனு சொன்னா திணறிடுவாய்ங்களா இல்லையா?

ஒண்ணு சொல்லட்டா...

1

'ஒண்ணு சொல்லட்டா..!' 'தப்பா நினைக்கலைனா ஒண்ணு சொல்லட்டா'னு ஆரம்பிப்பாங்க. ஆனா, ஒண்ணோட நிறுத்த மாட்டாங்க. ஏன்யா ஏன்?!

கழுதையும் கற்பூர வாசனையும்!

கழுதையும் கற்பூர வாசனையும்!

'கழுதைக்கு ஏன் கற்பூர வாசனை தெரியணும்? கருவாட்டு வாசனைலாம் தெரியக்கூடாதா?'

நாலுகாசு

4

'நாலுகாசு சம்பாதிக்க துப்பில்லை'னு சொல்றானுகளே... நிஜமாவே நாலு காசு சம்பாதிச்சா செல்லாதுனு அவனுகளுக்கு தெரியுமா தெரியாதா?

தலை போற விஷயம்!

தலை போற விஷயம்!

முக்கியமான மேட்டராம். தலை போற விஷயங்கள்ல தலைலாம் போகாது தெரியுமா? ஆனா, அப்படித்தான் சொல்வாங்களாம்!

வலைவீசி!

வலைவீசி!

போலீஸ் வலைவீசித் தேடுறதுக்கு குற்றவாளி வாலை மீனா இல்லை விலாங்கு மீனா?

பத்து பாத்திரம்!

பத்து பாத்திரம்!

சென்ட்டிமென்ட் மதர்ஸ் டயலாக் இது. 'எம்பிள்ளைகளை பத்து பாத்திரம் தேய்ச்சாவது காப்பாத்துவேன்.'

நொந்து நூடுல்ஸ்

நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்!

நான் ரொம்ப நொந்துட்டேன்னு சொல்றதோட நிப்பாட்டிக்கோங்க. ஏன்னா, 'நொந்து நூடுல்ஸ் ஆக முடியாது. வெந்துதான் நூடுல்ஸ் ஆக முடியும்!'

அஞ்சு நிமிஷம்!

அஞ்சு நிமிஷம்!

100 கி.மீ தூரத்துல நின்னாலும், 'மச்சான் ஒரு 5 நிமிஷத்துல வந்துருவேன்டா!' என்று சொல்வதும், 'ஃபை மினிட்ஸ் வாக்'னு சும்மா அடிச்சி விட்டு அரை மணி நேரம் டைம் வேஸ்ட் பண்றதுல்லாம் தமிழனோட ஒலக வழக்கம் தான்!

தேவைக்கேற்ப அல்லது தேவையான அளவு!

தேவைக்கேற்ப அல்லது தேவையான அளவு!

சமையல்குறிப்புல இப்படி ஈஸியா சொல்றமாதிரிதான் சில நேரங்களில் சில மனிதர்களும் வாழ்க்கையில வந்து போகிறார்கள். யாரோட தேவைக்கேற்பங்கிறதுதான் விஷயமே!



source https://www.vikatan.com/oddities/humoursatire/common-problems-of-tamils-explained-using-logic-less-statements

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக