Ad

திங்கள், 1 மார்ச், 2021

தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி முதல் பாலியல் வழக்கில் விசாரணை தொடக்கம் வரை! #NowAtVikatan

தொடங்கியது விசாரணை!

பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்து தனது விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி போலீஸ். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விசாரணையை தொடங்கினார். பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி வாக்குமூலம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இழுபறிக்கு காரணம் அ.ம.மு.க?

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதல், கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இணைவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரசாரத்துக்காக தமிழகம் வந்த பா.ஜ.க முன்னாள் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் இது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமித் ஷா

அ.தி.மு.க கூட்டணிக்குள் அ.ம.மு.க வை அழைத்துவர பா.ஜ.க அழுத்தம் தருகிறது என்றும் அதற்கு அ.தி.மு.க தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு தகவல்களை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

Also Read: அமித் ஷா கறார்; அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க?! - 3 மணி நேரப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

தி.மு.க - காங்கிரஸ்... ஒப்பந்தம்?

சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் இன்று காலை தொடங்கியது. மறுபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தி.மு.க.

அண்ணா அறிவாலயம்

இதனிடையே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் 20-க்கும் அதிகமான இடங்களை ஒதுக்க தி.மு.க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், வரும் 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க மார்ச் 4-ம் தேதி முதல் தனது வேட்பாளர் நேர்காணலை நடத்த முடிவெத்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamilnadu-election-2021-and-other-current-updates-02-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக