இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும், அதையடுத்து வீட்டில் தனிமைப்பட்டிருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சச்சின்.
கடந்த ஓராண்டாக உலகை உலுக்கிவரும் கொரோனாவின் இரண்டாவது அலை இப்போது மீண்டும் பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் தற்போது இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்பு பதிவிட்டிருக்கிறார் சச்சின்.
"கொரோனா தொற்று அண்டாமல் இருப்பதற்கான அத்தனை வரைமுறைகளை சரியாகப் பின்பற்றி, அடிக்கடி கொரோனா சோதனை மேற்கொண்டு வந்தேன். இருந்தும், தொற்றுக்கான சில அறிகுறிகள் ஏற்பட இன்று எடுத்துக்கொண்ட டெஸ்ட் பாசிட்டிவாக வந்திருக்கிறது. வீட்டில் வேறு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. வீட்டில் தனிமைப்பட்டு, மருத்துவர்கள் பரிசீலித்திருக்கும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றிவருகிறேன். எனக்கும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கும் மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றி. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் சச்சின்.
47 வயதான சச்சின், கடந்த வாரம் நடந்து முடிந்த Road Safety டி-20 தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
source https://sports.vikatan.com/sports-news/sachin-tendulkar-tested-positive-for-coronavirus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக