Ad

திங்கள், 8 மார்ச், 2021

சென்னை சூப்பர் கிங்ஸின் இயக்குநர் ஆகிறார் தோனி... ஆலோசகராக மும்பை இந்தியன்ஸின் சுந்தர் ராமன்!

ரியல் மேட்ரிட்டும், பார்சிலோனாவும் மோதும் போட்டிகளை கால்பந்தில் எல்கிளாசிக்கோ என்பார்கள். அதுபோல கிரிக்கெட்டில் எல்கிளாசிக்கோவாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கும்- மும்பை இந்தியன்ஸுக்கும் இடையிலான மோதல் வர்ணிக்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்க, அதிகமுறை இறுதிப்போட்டியை எட்டிப்பிடித்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆண்டுதான் ப்ளே ஆஃபை எட்டிப்பிடிக்காமல் பரிதாபமாக வெளியேறியது சிஎஸ்கே. இது சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் என்.சீனிவாசன் மற்றும் அவரது டீமுக்கு கவலையைத்தர அணிக்குள் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார்கள். அதன்முதல்கட்டமாக சுந்தர் ராமனை ஆலோசகராக நியமித்திருக்கிறது சிஎஸ்கே.

யார் இந்த சுந்தர் ராமன்?!

பிசிசிஐ-ன் பொருளாளர், செயலாளர், தலைவராக என்.சீனிவாசன் இருந்தபோது ஐபிஎல்-ன் சிஓஓ (Chief Operating officer) ஆக இருந்தவர்தான் சுந்தர் ராமன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் 2008 முதலே ஐபிஎல்-ன் முக்கிய அங்கம். லலித் மோடியின் வெளியேற்றத்துக்குப்பிறகு சுந்தர் ராமன்தான் ஐபிஎல்-ன் எல்லாமுமாக இருந்தார். ஐசிசி தலைவராக என்.சீனிவாசன் இருந்தபோதும் சுந்தர்ராமன்தான் அவரது வலதுகரம்.

சுந்தர் ராமன்

ஆனால், 2013 ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் ஃபிக்ஸிங் புகார்கள் எழுந்து, முத்கல் கமிட்டி அதைவிசாரித்தபோது சுந்தர் ராமன் மீதும் தவறுகள் இருப்பதாக அறிக்கைவெளியானது. இதனைத்தொடர்ந்து 2015-ல் சிஓஓ பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சுந்தர் ராமன்.

அதன்பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவின் சிஇஓ-வாக இருந்தார். இவரது தலைமையில்தான் ஐஎம்ஜி, ஐஎஸ்எல், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் ஆகியவை இருந்தன. இப்போது ரிலையன்ஸ் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியிருக்கும் சுந்தர் ராமன், சென்னை சூப்பர் கிங்ஸின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மும்பை இந்தியன்ஸின் ஆலோசகராகவும் இந்த ஆண்டு அவர் தொடர்வார் என சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸின் சிஇஓ-வாக இருக்கும் காசி விஸ்வநாதனுக்கு இந்த சீசனோடு ஓய்வளிக்கப்பட்டு, சுந்தர் ராமன் சென்னை சூப்பர் கிங்ஸின் சிஇஓ-வாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தோனி

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தாண்டோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று அடுத்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் இயக்குநராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இலங்கையின் குமார் சங்ககாரா இயக்குநர் ஆக இருக்கிறார். அதேப்போல் தோனி சூப்பர் கிங்ஸின் இயக்குநராக இருப்பார் என்கிறார்கள். தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங்கிற்கும் சிஎஸ்கே-வில் இதுதான் கடைசி ஆண்டாக இருக்கும் என்கிறார்கள்.



source https://sports.vikatan.com/ipl/dhoni-to-be-appointed-as-csks-director-of-cricket-operations-and-sundar-raman-as-consultant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக